ETV Bharat / state

டாஸ்மாக் கடை இயங்கி வந்த ஆக்கிரமிப்பு கட்டிடம் இடிப்பு !

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தை அடுத்துள்ள செண்பகராமன்புதூரில் டாஸ்மாக் கடை இயங்கி வந்த ஆக்கிரமிப்பு கட்டடம் பொதுப்பணித்துறையிரால் இடித்து அகற்றப்பட்டதுள்ளது.

occupied-tasmark-shop-building-was-demolished
டாஸ்மாக் கடை இயங்கி வந்த ஆக்கிரமிப்பு கட்டிடம் இடிப்பு
author img

By

Published : Jan 21, 2020, 9:35 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகேயுள்ள செண்பகராமன்புதூர் - பூதப்பாண்டி சாலையில் தோவாளை வாய்க்காலுக்கு அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 3.45 செண்ட் இடம் பூமணிதாஸ் என்பவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டடம் கட்டியதுடன் அக்கட்டடத்தில் முறைகேடான வகையில் மின் இணைப்பு பெற்று அதனை அரசு டாஸ்மாக் மதுபான கடைக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார்.

இந்த நில ஆக்கிரமிப்பு சம்பந்தமாக பொதுப்பணித்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததன் அடிப்படையில் கடந்த ஆகஸ்டு மாதம் 13 ஆம் தேதி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அவர்களுடன் நில அளவைத்துறை அலுவலர்களும் சென்று நிலத்தை அளந்து ஒரு பகுதியை அன்றே அப்புறப்படுத்தினர். மேலும் ஆக்கிரமிப்பு இடத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் மதுபானக்கடையையும் அங்கிருந்து உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். அதனடிப்படையில் அங்கு இயங்கிவந்த டாஸ்மாக் கடை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.

மேலும் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்ற பொதுப்பணித்துறை, வருவாய் துறைகளை சேர்ந்த ஊழியர்கள் பொக்லின் இயந்திரத்தோடு வருகை புரிந்தபோது இடத்தினை ஆக்கிரமித்து வைத்திருந்த பூமணிதாஸ் இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரிடம் அலுவலர்களும், காவல்துறையினரும் உரிய ஆவணங்களை காண்பிக்குமாறுக் கூறினர். ஆனால் அவர் ஆவணங்களை காண்பிக்காத காரணத்தால் தொடர்ந்து ஆக்கிரமிப்பு பகுதி முழுவதையும் இடித்து அகற்றினர்.

டாஸ்மாக் கடை இயங்கி வந்த ஆக்கிரமிப்பு கட்டிடம்

இந்த பணியின்போது பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் வின்சன்ட் லாரன்ஸ், தோவாளை வருவாய் ஆய்வாளர் குளோரி, கிராம நிர்வாக அலுவலர் பவானி, ஆரல்வாய்மொழி காவல்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்தனர்.

இதையும் படிங்க : சூப்பர் சங்கி யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்

Intro:கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூரில் டாஸ்மார்க் கடை இயங்கி வந்த ஆக்கிரமிப்பு கட்டிடம் இடிப்புBody:tn_knk_02_aggressive_demolition_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூரில் டாஸ்மார்க் கடை இயங்கி வந்த ஆக்கிரமிப்பு கட்டிடம் இடிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே
செண்பகராமன்புதூர் - பூதப்பாண்டி சாலையில் தோவாளை சானல் கடந்து செல்கிறது, இதில் கம்பிபாலம் உள்ளது. இப்பகுதியில் இருந்து தோவாளை வரை இணைப்பு சாலை உள்ளது. இந்நிலையில் இச்சாலையில் செண்பகராமன்புதூர் அருகே வடக்கு மலையில் இருந்து மழை தண்ணீர் வருகின்ற உப்பாத்து ஓடையானது தோவாளை சானலுக்கு அடியில் கடந்து செல்கின்றது. இதன் அருகே பொதுபணித்துறைக்கு சொந்தமான சுமார் 3.45 செண்டு இடத்தினை செண்பகராமன்புதூர் பகுதியை சார்ந்த பூமணிதாஸ் என்பவர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியதுடன் அக்கட்டிடத்தில் மின் இணைப்பு பெற்று அதனை டாஸ்மார்க் கடைக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார்.இந்நிலையில் இவ்விடத்தினை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பொதுபணித் துறைக்கு புகார் வந்ததன் அடிப்படையில் கடந்த ஆகஸ்டு மாதம் 13-ம் தேதி சம்பவ இடத்திற்கு பொதுபணித்துறை அதிகாரிகள் வந்து ஆக்கிரப்பு இடத்தின் ஒரு பகுதியை அப்புறப்படுத்திவிட்டு மேலும் ஆக்கிரமிப்பு இடத்தில் டாஸ்மார்க் கடை இயங்கி வருவதால் அதனை உடனே அப்புறப்படுத்த வேண்டும் எனவும் பின்னர் அப்பகுதியினை இடிக்கப்பப்டும் என தெரிவித்து இருந்தனர். அதன் அடிப்படையில் இங்கு இயங்கி வந்த டாஸ்மார்க் கடை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த இடத்திற்கு பொதுபணித்துறை உதவி பொறியாளர் வின்சன்ட் லாரன்ஸ் மற்றும் தோவாளை வருவாய் ஆய்வாளர் குளோரி, கிராம நிர்வாக அலுவலர் பவானி, சாவையர் சங்கரம்மாள் , மற்றும் வருவாய் துறையினை சார்ந்த ஊழியர்கள் பொதுபணித்துறை ஊழியர்களும் அங்கு கூடினர். மேலும் பாதுகாப்புக்காக ஆரல்வாய்மொழி காவல் நிலைய காவல்துறையினர் பாதுகாப்புக்காக வந்திருந்தனர். ஏற்கனவே சர்வே துறையினர் மூலம் ஆக்கிரமிப்பு இடத்தினை அளந்த பகுதியினை பொக்லின் இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டது.இந்நிலையில் இடத்தினை ஆக்கிரமித்து வைத்தவர் இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதிகாரிகளும், போலீசாரும் உங்களிடம் முறையான ஆவணம் காண்பிக்க வேண்டும் என தெரிவித்தனர். ஆனால் அவர் போதுமானது ஆவணத்தினை காண்பிக்காத காரணத்தால் மீண்டும் இடிக்கும் பணி தொடங்கி ஆக்கிரமிப்பு பகுதி முழுவதும் இடித்து அகற்றப்பட்டது.
விஷுவல் - கட்டிடம் இடிக்கப்படுவது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.