இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 17ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவின் 9ஆவது நாள் சரஸ்வதி, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
விழாவின் 10ஆவது நாள் விஜயதசமி ஆகும். நவராத்திரியின்போது பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நவராத்திரியின் முக்கிய அம்சம் கொலு வைப்பதாகும். அதன்படி 3 முதல் 9 படிகள் அமைத்து, கொலு பொம்மைகளை அலங்கரிப்பார்கள்.
இதையொட்டி தற்போது கொலு பொம்மைகள் விற்பனை தொடங்கி உள்ளது. அதன்படி, நாகர்கோவிலில் வடிவீஸ்வரம், கோட்டார், பார்வதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கொலு பொம்மைகள் விற்பனை கடைகள் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ளன.
தசாவதாரம், திருமணம், அறுபடை வீடு, அஷ்டலஷ்மி, ஆண்டாள் திருமஞ்சனம், கிருஷ்ண லீலை, சீதா கல்யாணம், வாஸ்து லட்சுமி, விஸ்வரூபம், சீமந்தம் செட் பொம்மைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை என வகைவகையான கொலு பொம்மைகள் விற்பனைக்காக வரவழைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, மண்ணாலான சிலைகள் மட்டுமின்றி, சார்ட் பேப்பர், காகிதக் கூழ், பிளாஸ்ட் ஆப் பாரிஸ் ஆகியவற்றிலும் செய்யப்பட்ட சிலைகள் உள்ளன.
சிறிய ரக பொம்மைகள் ரூ.50-லிருந்து விற்பனைக்கு உள்ளது. பெரிய ரக பொம்மைகள் ரூ.2000 வரை விற்பனையில் உள்ளன.
இதையும் படிங்க...புனித பூமியான இந்தியா பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக மாறியுள்ளது - உயர் நீதிமன்றம் வேதனை!