ETV Bharat / state

Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி! - Speaker Nanjil Sampath

மேடை பேச்சாளர் மற்றும் நாஞ்சில் சம்பத் மூளையில் ரத்தக் கசிவு காரணமாக வலிப்பு நோய் ஏற்பட்டு, ஞாபக மறதி உருவாகி கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாஞ்சில் சம்பத் மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

author img

By

Published : Jan 25, 2023, 12:51 PM IST

கன்னியாகுமரி: திருவட்டார் அருகே மணக்கா விளையைப் பகுதியைச் சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத் மதிமுக கட்சி அதனைத் தொடர்ந்து அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் முக்கிய பிரதிநிதியாக இருந்து அரசியல் பணியாற்றியவர். தமிழ்நாட்டில் மேடைப் பேச்சுகளில் ஒரு முன்னிலை பேச்சாளராக இருந்து வந்தார். பட்டிமன்றங்களாக இருந்தாலும் சரி, இலக்கிய மேடையாக இருந்தாலும் சரி, அரசியல் மேடையாக இருந்தால் சரி தன்னுடைய பேச்சாற்றலால் தமிழக மக்களை வசப்படுத்தியவர் நாஞ்சில் சம்பத்.

சென்னையிலிருந்து சொந்த ஊர் வந்த அவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரது உறவினர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில் அவரது மூளையில் ரத்தக் கசிவு காரணமாக வலிப்பு ஏற்பட்டு, ஞாபக மறதியும் ஏற்பட்டிருந்தது.

பின்னர், உடல்நலம் முன்னேற்றம் அடைந்து சிகிச்சையில் இருந்து வீடு திரும்பிய நாஞ்சில் சம்பத், மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சுயநினைவு இல்லாமல் இருக்கும் அவரை கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் உரிய ஞாபக மறதி திறன் வர இன்னும் 3 நாட்கள் ஆகும் எனக் கூறியுள்ளனர். நாஞ்சில் சம்பத் உடல் நலம் சரியில்லாமல் இருப்பது அரசியல் வட்டாரங்களிலும் சரி, இலக்கிய உலகிலும் சரி மிகப் பெரிய அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கில் திமுகவுக்கு திருவோடு தான் கிடைக்கும் - மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.