ETV Bharat / state

நாகர்கோவிலில் உள்ள குப்பைக் கிடங்கை மூட பொதுமக்கள் கோரிக்கை! - Waste management complex

கன்னியாகுமரி: நாகர்கோவில் மையப்பகுதியில் இருக்கும் குப்பைக் கிடங்கை மூட அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாகர்கோவிலில் உள்ள குப்பைக் கிடங்கை மூட பொதுமக்கள் கோரிக்கை!

author img

By

Published : Jun 9, 2020, 5:56 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மத்திய பகுதியில் வலம்புரி விளையில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வலம்புரி விளை சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மழைக்காலங்களில் வீசும் கடுமையான துர்நாற்றம், இப்பகுதியில் இருந்து வரும் புழு பூச்சிகளால் இம்மக்கள் வேதனை அடைந்துவருகின்றனர்.

இதனால் இந்த வலம்புரிவிளை குப்பை கிடங்கை மூட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் நீண்ட நாளாக கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், ஊரடங்கு தளர்வு விதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஏராளமான வாகனங்கள் இங்கு வந்து குப்பைகளை கொட்டின. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நாகர்கோவிலில் உள்ள குப்பைக் கிடங்கை மூட பொதுமக்கள் கோரிக்கை!

அதுமட்டுமின்றி வலம்புரிவிளை குப்பை கிடங்கை மூடுவதுடன் இந்த குப்பை கிடங்கை நகரின் வெளி பகுதிக்கு மாற்ற வேண்டும் என்றும் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை வளாகத்தின் சுற்றுச்சுவரில் கரோனா விழிப்புணர்வு ஓவியங்களை வரைய வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க... பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - முதலமைச்சர் பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.