ETV Bharat / state

மாசடைந்து வரும் குளத்து நீர்  - நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே வடக்கு கோணம் பகுதியில் ரசாயனக் கழிவு நீர் கலப்பதால் குளத்து நீர் மாசடைந்து, பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசி வருவதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாசடைந்து வரும் குளத்து நீர்
author img

By

Published : Nov 5, 2019, 8:54 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வடக்கு கோணம் பகுதியில் 65 ஏக்கர் சுற்றளவு கொண்ட நீர் பிடிப்புள்ள குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதியைச் சார்ந்த 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தாய் குளமான இக்குளத்துக்கு, சேய் குளமாக 5 கிளைக் குளங்களும் உள்ளன. அதற்கும் இங்கிருந்து தான் தண்ணீர் செல்கிறது.

மாசடைந்து வரும் குளத்து நீர்

கால்நடைகள் வந்து தண்ணீர் குடிப்பதும் இந்த குளத்தில் தான். இந்த குளத்து நீரைப் பாசனத்திற்கு மட்டுமல்லாமல் குடிநீர் தேவைக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர் அப்பகுதி மக்கள். சமீப காலமாக அருகே உள்ள ராணித் தோட்டம் அரசுப் போக்குவரத்துப் பணிமனையில் இருந்து வரும் கழிவு நீர் மற்றும் கழிவு எண்ணெய்க் கால்வாய், இந்த குளத்தில் வந்து கலக்கிறது. இதனால் இந்தக் குளத்தின் நீர் பச்சை நிறமாக மாறி காட்சியளிப்பதுடன் , துர்நாற்றம் வீசி வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பலமுறை மக்கள் இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார் அளித்த பின்னரும் அரசு இதுகுறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இந்த குளத்து நீரைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு வருகிறது. அதே வேளையில் குளத்தில் இருக்கும் மீன்கள் கூட அடிக்கடி செத்து மிதக்கின்றன. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன் இக்குளத்தில் முன்னர் செயல்பட்டுவந்த சுற்றுலா படகு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படியுங்க:

பாய்ந்தோடும் ரசாயன கழிவு: 5 ஆயிரம் ஏக்கர் விவசாய பூமிக்கு ஆபத்து

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ரசாயன கழிவு நீர் கலப்பதால் குளத்து நீர் மாசு அடைந்து தண்ணீர் பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Body:குமரி மாவட்டம் நாகர்கோயில் அடுத்து வடக்கு கோணம் பகுதில் 65 ஏக்கர் சுற்றளவு நீர் பிடிப்பு உள்ள குளம் உள்ளது. இந்த குளத்தில் அந்த பகுதியை சார்ந்த 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் படுத்தி வருகின்றனர்.
தாய் குளமான இதன் கிளையாக 5 கிளை குளங்களும் உள்ளது. அதற்கும் இங்கிருந்தது தான் தண்ணீர் செல்கிறது. இந்த குளத்து தண்ணீர் பாசனத்திற்கும் குடிநீருக்கும் பயன்பட்டு வருகிறது. கால் நடைகள் தண்ணீர் குடிப்பதும் இந்த குளத்தில் தான்.
இதனிடையே அருகே உள்ள ராணி தோட்டம் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து வரும் கழிவு நீர் மற்றும் கழிவு ஆயில் கால்வாய் வழியாக குளத்தில் வந்து கலந்து வருகிறது. இதனால் இந்த குளத்தின் தண்ணீர் பச்சை நிறமாக மாறி காட்சியளிக்கிறது. பலமுறை மக்கள் இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்க்கு புகார்கள் அளித்த பின்னரும் அரசு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
இந்நிலையில் இந்த குளத்து நீரை பயன்படுத்தும் பொது மக்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது. அதே வேளையில் குளத்தில் இருக்கும் மீன்கள் கூட அடிக்கடி செத்து மிதக்கின்றன. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன் இக்குளத்தில் செயல்பட்டுவந்த சுற்றுலா படகு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.