ETV Bharat / state

நாகராஜா கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடக்கம் - nagaraja temple

கன்னியாகுமரி : தை மாத நாகராஜா திருக்கோயில் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

நாகராஜா கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது
நாகராஜா கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது
author img

By

Published : Jan 31, 2020, 4:10 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த நாகராஜா கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதத்தில் பத்து நாள்கள் வெகு விமரிசையாகப் பெருந்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

இதனையடுத்து இந்தாண்டிற்கான விழா கொடியேற்றதுடன் இன்று தொடங்கியது. கோயில் தந்திரிகள் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து திருகொடியேற்றம் செய்தனர். தொடர்ந்து கோயிலில் உள்ள மூலவர் நாகராஜா சுவாமிக்கு சிறப்பு திருமுழுக்கு, பூஜைகள் நடத்தப்பட்டன.

கொடியேற்ற நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள வருகைதந்திருந்தனர். இக்கோயிலில் நடக்கும் பத்து நாள் விழாவில் ஒவ்வொரு நாளும் புஷ்ப வாகனத்தில் சுவாமி எழுந்தருளல், மண்டகப்படி, சிங்க வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடைபெறவுள்ளன.

நாகராஜா கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது

ஒன்பதாம் நாள் திருவிழாவான வரும் எட்டாம் தேதி தேரோட்டமும், ஒன்பதாம் தேதி சுவாமி ஆராட்டு நிகழ்ச்சியுடன் பத்து நாள்கள் திருவிழாவும் நிறைவுபெறும்.

இதையும் படிங்க :பாடங்களுடன் சேர்த்து காய்கறி வேளாண்மை பயிற்சி: அடடே முயற்சி!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவிலில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு நாகராஜா கோவிலில் தை பெருந்திருவிழா இன்று கொடியற்றதுடன் தொடங்கியது. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள கலந்து கொண்டனர்.

Body:கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்து பெற்ற கோவில்களில் நாகர்கோவிலில் அருள்மிகு நாகராஜா கோவிலும் ஒன்றாகும். இக்கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க கோவிலாகும்.

இக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் தை பெருந்திருவிழா பத்து நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டிற்கான தை பெருந்திரு விழா இன்று கொடியற்றதுடன் தொடங்கியது.

கோவில் தந்திரிகள் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து திருகொடியற்றம் செய்தனர். தொடர்ந்து கோவிலில் உள்ள மூலவர் நாகராஜா சுவாமிக்கு சிறப்பு அபிசேகம், சிறப்பு பூஜைகள் நடத்தபட்டன. கொடியற்ற நிகழ்சியில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள வருகை தந்தனர்.

இக்கோவிலில் நடக்கும் பத்து நாட்கள் விழாவில் ஒவ்வொரு நாளும் புஷ்பக விமானத்தில் சுவாமி எழுந்தருளல், மண்டகப்படி, சிங்க வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடைபெற உள்ளன. ஒன்பதாம் நாள் திருவிழாவான வரும் எட்டாம் தேதி தேரோட்டமும், ஒன்பதாம் தேதி சுவாமி ஆராட்டு நிகழ்சியுடன் பத்து நாட்கள் திருவிழவும் நிறைவு பெரும். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.