குமரி மாவட்ட பாஜக மூத்தத் தலைவர் எம்.ஆர். காந்தி(70). இவர் பாஜக மாநில துணைத் தலைவராக உள்ளார். இவரது வீடு நாகர்கோவில் சர்குண வீதியில் உள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு, ஏப்ரல் 21ஆம் தேதி காலை ஆறு மணி அளவில் இவர் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தபோது ஒரு கும்பல் இவரை வெட்டிக் கொல்ல முயன்றனர். இதில் எம்.ஆர். காந்தி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து நேசமணிநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், திருவிதாங்கோட்டையைச் சேர்ந்த அப்துல் சமீம், நாகர்கோவில் இளங்கடையைச் சேர்ந்த செய்யது அலி நவாஸ், இளங்கடை சாம்பவர் தெருவைச் சேர்ந்த அப்துல் அஜீஸ், திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த முஹமது சாலி, கோட்டாறு இளங்கடை பகுதியைச் சேர்ந்த ஷாஜி ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கிற்கான இறுதி தீர்ப்பு நாளை வழங்கப்படுகிறது.