ETV Bharat / state

கன்னியாகுமரியில் துறைமுகம்? எம்.பி வசந்தகுமார் பதில்

கன்னியாகுமரி: முக்கடல் சங்கமிக்கும் இடத்தை பார்வையிடுவதற்காகவே மத்திய அமைச்சர் கன்னியாகுமரி வந்து சென்றிருப்பார் என காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் கூறியுள்ளார்.

author img

By

Published : Aug 26, 2019, 8:47 AM IST

mp-vasanthakumar-talks-about-kanniyakumari-harbour

கன்னியாகுமரி அருகே சுக்குபாறை தேரிவிளையில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், "மத்திய அமைச்சர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரி வந்தார். துறைமுகம் அமைப்பதற்காக இடம் பார்க்க வந்தார் என்று சிலர் கூறுகிறார்கள். அது உண்மையாக இருக்காது என்பதே என் கருத்து. அவர் மூன்று கடல்கள் சங்கமிக்கும் இடத்தை பார்வையிடக்கூட வந்திருக்கலாம்.

எம்.பி.வசந்தகுமார் செய்தியாளர் சந்திப்பு

கன்னியாகுமரியில் கடலில் கல்லைப்போட்டு நிரப்பி துறைமுகம் கொண்டு வருவது சாத்தியமில்லை. ஒரு போதும் இந்த தொகுதியில் பெட்டக துறைமுகம் வராது. மேலும் மத்திய அரசின் மோசமான நிதிக்கொள்கையால் பலர் வேலையிழந்துள்ளனர். இந்தியாவில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் இன்னும் பலர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாடு நாசமாய் போய்க்கொண்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.

Intro:கன்னியாகுமரியில் ஒருபோதும் சரக்கு பெட்டக துறைமுகம் வராது. கன்னியாகுமரி அருகே காமராஜர் பிறந்தநாள் விழாவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பரிசு அளித்த பிறகு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் பேட்டி.

Body:கன்னியாகுமரியில் ஒருபோதும் சரக்கு பெட்டக துறைமுகம் வராது. கன்னியாகுமரி அருகே காமராஜர் பிறந்தநாள் விழாவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பரிசு அளித்த பிறகு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் பேட்டி.

கன்னியாகுமரி அருகே சுக்குபாறை தேரிவிளையில் காமராஜர் பிறந்தநாள் விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பரிசளித்த பிறகு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.:- கன்னியாகுமரியில் ஒருபோதும் சரக்கு பெட்டக துறைமுகம் வராது. கடலில் கற்களை போட்டு நிரப்பினால் இங்குள்ள பகுதியில் சில பகுதிகள் அழிந்து போகும் .எனவே கல்லை போட்டு நிரப்பி துறைமுகம் கொண்டு வருவது சாத்தியமில்லை. மத்திய அமைச்சர் கன்னியாகுமரியில் மூன்று கடல்கள் சங்கமிக்கும் பகுதியை பார்த்து விட்டு செல்ல வந்திருப்பார் .மத்திய அமைச்சர் வரும் போது இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் அதை கூட அவர் செய்யவில்லை. 7 தீவிரவாதிகள் தமிழகத்திற்கு ஊடுருவி இருப்பது குறித்து ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பேசுவதற்காக அவர்கள் அழைத்திருக்கலாம் .மத்திய அரசு திட்டங்களை திட்டமிடாமல் செய்வதால்தான் தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்படுகிறது. அதற்கு பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி பல திட்டங்களை உதாரணமாகும். தற்போது இரண்டு கோடி பேர் வேலை இழந்திருக்கிறார்கள். ஒவ்வொரு துறைகளிலும் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப் பட்டால் தான் பொருளாதாரம் சரியாக வரும் இல்லை என்றால் வேலை இல்லா திண்டாட்டம் தான் அதிகமாக வரும். நாட்டின் பொருளாதாரம் மந்தமாக இருந்து கொண்டே இருக்கிறது என்று மத்திய அரசின் துணை ஆலோசகரை கூறியிருக்கிறார். எனவே நாடு மிகவும் மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது. என்று இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். வெளி உலகத்திற்கு ராகுல்காந்தியை காஷ்மீருக்கு வரச் சொன்னோம் என்று கூறிவிட்டு விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தியது ஜனநாயகப் படுகொலையாகும்.ஆளுனர் மேலிட உத்தரவுப்படி அவர் செயல்படுகிறார். அவர்களிடம் கூறிய பெண்ணிற்கு மட்டுமல்ல காஷ்மீர் முழுவதும் அமைதியில்லாமல் தான் இருக்கிறது. தன் மகளையே கொண்ற கிரிமினல் குற்றவாளி கொடுத்த புகாரை வைத்து முன்னாள் மத்திய அமைச்சரை கைது செய்திருக்கிறார்கள். இதில் என்ன நியாயம் இருக்கிறது. நேரு பிரதமராக இருக்கும்போது முப்படைகளுக்கும் தனித்தனி தளபதிகள் வேண்டும் என ஆலோசனை வழங்கியவர் காமராஜர் .ஆனால் தற்போது முப்படைகளுக்கும் ஒரே தளபதி வேண்டுமென்று கூறுகிறார் இந்த நாடு சீரழிந்து உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.