கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் நாகர்கோவில் அருகே புத்தரியில் தேர்தல் நன்றி அறிவிப்பு பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்," தமிழ்நாட்டில் ஏரி,குளங்கள் தூர்வாரப்படுவதாக கூறுகிறார்கள்.ஆனால் அவை முறையாக தூர்வாரப்படவில்லை. கர்நாடகாவிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீரை தேக்கி வைக்கும் அணைகள் பாரமரிக்கப்படாமல் இருக்கிறது.
பாஜக அரசு இருட்டுக்குள் சட்டம் போட்டு காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக வைத்துள்ளனர்.மேலும் கர்நாடகாவில் சட்டப்பேரவை உறுப்பினர்களை ஆள்பிடித்து ஆட்சியைக் கவிழ்த்தனர்.அதுபோல அனைத்து மாநிலங்களிலும் ஆள் பிடிக்கும் வேலையை பாஜக அரசு செய்து வருகிறது" என்றார்.