ETV Bharat / state

சாலை மறியலுக்கான முன்னறிவிப்பு மனு - ஆட்சியரிடம் வழங்கிய குமரி மக்களவை உறுப்பினர்! - சாலை மறியலுக்கான முன்னறிவிப்பு

குமரி: மாவட்டத்திலுள்ள சாலைகளைச் சீரமைக்க வலியுறுத்தி நடத்தப்படும் சாலை மறியலுக்கான முன்னறிவிப்பு மனுவைக் குமரி மக்களவை உறுப்பினர் வசந்த குமார் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

mp vasantha kumar give protest petition to collecto
author img

By

Published : Nov 5, 2019, 7:55 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை முதல் காவல் கிணறு வரை தேசிய நெடுஞ்சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இதனால் தினம் தினம் விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இந்தச்சூழலில் சாலைகளைச் சீரமைக்க வலியுறுத்தி வருகின்ற 16ஆம் தேதி களியக்காவிளை, அழகிய மண்டபம், நாகர்கோவில், ஆரல் வாய்மொழி உட்பட ஐந்து இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாகக் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர், கன்னியாகுமரியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் சேர்ந்து கூட்டாக அறிவித்திருந்தனர்.

போராட்ட முன்னறவிப்பை ஆட்சியரிடம் வழங்கிய எம்.பி., வசந்த குமார்

அந்தப் போராட்டத்திற்கான முன்னறிவிப்பு மனுவைக் குமரி மாவட்ட ஆட்சியரிடம் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் இன்று வழங்கினார். அப்போது, நாகர்கோவில், குளச்சல் மற்றும் கிள்ளியூர் தொகுதியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: அலட்சியத்தால் தொடரும் அவலம் - நான்கு நாட்களில் எட்டு குழந்தைகள் உயிரிழப்பு!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்க இரண்டு நிதி ஆண்டுகளில் 34 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டும் இன்னும் எந்த பணிகளும் நடைபெறவில்லை. இதனை கண்டித்து வரும் 16ம் தேதி 5 எம்எல்ஏக்கள் உடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக கன்னியாகுமரி எம்பி வசந்தகுமார் இன்று மாவட்ட ஆட்சியரிடம் முன்னறிவிப்பு மனு அளித்தார்.Body:கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை முதல் காவல்கிணறு வரை தேசிய நெடுஞ்சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் தினம் தினம் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் புகார்கள் உள்ளன.
இந்நிலையில் இந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி வரும் 16ம் தேதி களியக்காவிளை, அழகியமண்டபம், நாகர்கோவில், ஆரல்வாய்மொழி உட்பட ஐந்து இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என எம்பி வசந்தகுமார் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில் வரும் 16ம் தேதி மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வசந்தகுமார் எம்பி முன்னறிவிப்பு மனுவை மாவட்ட கலெக்டரிடம் அளித்தார். அவருடன் நாகர்கோவில் குளச்சல் மற்றும் கிள்ளியூர் தொகுதியை சேர்ந்த எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.