ETV Bharat / state

மோடி தொடங்கிவைத்த சாலையில் விரிசல் - மணல் கொள்ளையால் பாதிப்பு - மணல் அள்ளப்பட்டதால்]

நாகர்கோயில்: நரிக்குளம் அருகே தங்க நாற்கர சாலை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலையின் அருகே மணல் அள்ளப்பட்டு வந்ததால், சாலையில் பெரும் விரிசல் ஏற்பட்டு அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மணல் அள்ளப்பட்டதால்; சாலை விரிசல் போக்குவரத்து பாதிப்பு!
author img

By

Published : Jun 11, 2019, 7:58 AM IST

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் தொடங்கி வைக்கப்பட்டு, இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் நான்கு வழிச் சாலை திட்டமாக, தங்க நாற்கர சாலைத் திட்டம் விளங்குகிறது. கன்னியாகுமரியில் நரிக்குளம் பகுதியில் சுமார் 22 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு நான்கு வழிச் சாலைகள் அமைக்கப்பட்டது. இதனை மூன்று மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சமூக விரோதிகள், சாலை அருகில் உள்ள குளத்திலிருந்த தண்ணீரை வெளியேற்றிவிட்டு, குளத்தில் 10 அடி ஆழத்திற்கும் அதிகமாக மண்ணை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதனால் சரியும் அபாயத்தில் இருந்து வந்த சாலையில், மழை பெய்ததால் பெரிய விரிசல் ஏற்பட்டு உடைந்துள்ளது. விரிசல் ஏற்பட்ட இடத்தில் தடுப்புகள் வைத்து, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மோடி தொடங்கிவைத்த சாலையில் விரிசல் - மணல் கொள்ளையால் பாதிப்பு

கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், நேரில் வந்து விரிசல் விழுந்த சாலையை ஆய்வு செய்தார். மேலும் பாலம் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:
கன்னியாகுமரி அருகே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட கன்னியாகுமரி காஷ்மீர் இணைப்பு பாலமான நரிக்குளம் பாலம் ஒருநாள் மழையில் உடைந்தது .பொதுமக்கள் அதிர்ச்சி.

Body:கன்னியாகுமரி அருகே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட கன்னியாகுமரி காஷ்மீர் இணைப்பு பாலமான நரிக்குளம் பாலம் ஒருநாள் மழையில் உடைந்தது .பொதுமக்கள் அதிர்ச்சி.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தங்க நாற்கர சாலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தப் பணிகள் ஓரளவு முடிந்த நிலையில் வழக்கு சம்பந்தமாக பாலப்பணிகள் மட்டும் கிடப்பில் போடப்பட்டது. இதனால் பல வருடங்களாக பாலப் பணிகள் முடிக்கப்படாமல் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் போக்குவரத்திற்காக பல கிலோ மீட்டர்கள் சுற்றி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது .பின்னர் வழக்குகள் முடிந்து சுமார் 22 கோடி ரூபாய் செலவில் கன்னியாகுமரி அருகே நரி குளத்தில் பாலம் அமைக்கப்பட்டது. இதனை பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கன்னியாக்குமரியில் வைத்து நடந்த நிகழ்ச்சியில் திறந்து வைத்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்த குளத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு மணல் அள்ளப்பட்டது. பாலத்தின் மிக அருகில் அதிகமாக 10 அடி ஆழத்திற்கு தனியார் சார்பில் அரசு அனுமதி இல்லாமல் மணல் அள்ளப்பட்டு விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு பெய்த மழையில் பாலத்தின் ஒரு பகுதியில் பெரிய விரிசல் ஏற்பட்டது. இதனால் பாலத்தின் தடுப்புகள் வைத்து தற்போது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பாலத்திற்கு மிக அருகில் மணல் அள்ளியதால் ஏற்பட்ட பள்ளத்தில் பாலம் இருப்பு இருந்து விரிசல் ஏற்பட்டு உடைந்து காணப்படுகிறது. இதனை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் எம்எல்ஏ நேரடியாக ஆய்வு செய்தார். பாலம் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாலத்திற்கு மிக அருகில் மணல் மணல் அள்ளியதால் ஏற்பட்ட பள்ளத்தில் இருப்பு இருந்து பாலம் குறைவதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே இதனை உடனடியாக சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

( குறிப்பு: நரிகுளத்தில் மணல் அள்ளுவதால் நரிகுளம் பாலத்திற்கு ஆபத்து உடையும் அபாயம் என முதலில் எச்சரித்திருந்தது etv bharat.)

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.