ETV Bharat / state

மக்கள் விரும்பாத எந்தத் திட்டமாக இருந்தாலும் அதை எதிர்ப்பேன் - விஜய் வசந்த்

கன்னியாகுமரி: மக்கள் விரும்பாத துறைமுகத் திட்டம் உள்பட எந்தத் திட்டமாக இருந்தாலும் எதிர்த்துப் போராடுவேன் என கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் உறுதியளித்துள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்
காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்
author img

By

Published : Mar 15, 2021, 5:11 PM IST

கன்னியாகுமரியில் மறைந்த எம்பி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் நாகர்கோவிலில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்திற்குள்பட்ட ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஏற்கனவே திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்ற நிலையில் அதே கூட்டணி தொடர்வதால் மீண்டும் ஆறு தொகுதிகளையும் கைப்பற்றுவோம். எங்களது கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் தீவிரமாகப் பணியாற்றிவருகின்றனர்.

விஜய் வசந்த்
என்னை வெற்றிபெறச் செய்தால் கற்றவர்கள் அதிகம் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு அரசு, தனியார் வேலைவாய்ப்பு குறித்து புது திட்டம் வகுக்கப்படும். துறைமுகத் திட்டம் உள்பட மக்கள் விரும்பாத எந்தத் திட்டமும் அரசுகளால் கொண்டுவரப்பட்டாலும் அதை எதிர்த்து முழுமூச்சோடு போராடுவேன். மக்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களுக்காகப் பணியாற்றுவேன்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.