ETV Bharat / state

இறந்தவரின் உடலை தர மறுத்த மருத்துவமனை: 'ரமணா' பட பாணியில் நடந்த சோகம்!

கன்னியாகுமரி: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த முதியவருக்கு கரோனா தொற்று இல்லை என அச்சிடப்பட்ட சீட்டில் பாசிட்டிவ் என திருத்தி எழுதியதால் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

government
government
author img

By

Published : Jul 28, 2020, 12:24 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுப்படுத்தும் பணியில் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தி வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. உணவு மற்றும் மருந்து வழங்குவதில் கால தாமதம் ஏற்படுவதாக நோயாளிகள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு நாகர்கோவில் அருகே தெரிசனங்கோப்பு பகுதியை சேர்ந்த 61 வயது முதியவர் ஒருவர் வயிற்று பிரச்னை காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதே நாளில் முதியவர் உயிரிழந்தார்.

ஏற்கனவே முதியவருக்கு தனியார் மருத்துவமனையில் கரோனா 'நெகடிவ்' என பரிசோதனை முடிவு கொடுக்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததால் அங்கும் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. ஆனால், பரிசோதனை முடிவு வருவதற்கு காலதாமதமானதால் முதியவரின் உறவினர்கள் உடலை கேட்டு மருத்துவமனை நிர்வாகத்திடம் வற்புறுத்தினர். உடலை தர முடியாது என திட்டவட்டமாக கூறிய மருத்துவமனை நிர்வாகம், பரிசோதனை முடிவு வெளிவந்த பின்னரே உடலை ஒப்படைக்க முடியும் என தெரிவித்தது.

இந்நிலையில் நேற்றிரவு (ஜூலை 27) வெளிவந்த பரிசோதனை முடிவில் முதியவருக்கு கரோனா தொற்று நெகட்டிவ் என அச்சிடப்பட்ட பேப்பரிலேயே ஒயிட்னர் மூலம் நெகட்டிவை மறைத்து, பாசிட்டிவ் என திருத்தி எழுதிய சீட்டினை உறவினர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. முதியவரின் உடலை கேட்டு வருவதன் காரணமாகவே மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பழிவாங்கும் நோக்குடன் இதுபோன்று திருத்தி எழுதியிருப்பதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.

திருத்தி எழுதப்பட்ட பரிசோதனை ரிப்போர்ட்

இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, நிர்வாகம் தவறாக நடந்துள்ளது. திருத்தியது தவறுதான். புதிதாக பரிசோதனை ரிப்போர்ட் எழுதி கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அந்த மருத்துவர் தவறாக செய்துள்ளார். இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம். இறந்தவருக்கு பாஸ்டிவ் எனக் கூறியுள்ளனர். தற்போது மருத்துவமனை அலுவலர் ஒருவர் பேசும் ஆடியோ வாட்ஸ்அப் போன்ற சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதுபோன்ற தவறுகள் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அடிக்கடி நடந்து வருவதாகவும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ தலைமறைவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.