விருதுநகர் மாவட்டம் மூளிப்பட்டியில் பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜியின் குலதெய்வக் கோயில் உள்ளது. அக்கோயிலுக்கு வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. அதனால் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குடும்ப முறைப்படி காப்புக்கட்டி விரதமிருந்து-வருகிறார்.
அதைத்தொடர்ந்து அவர் குடமுழுக்கு திருக்கலச அபிஷேகத்திற்குப் புனிநீர் சேகரித்துவருகிறார். அதன்படி நேற்று பாபநாசத்தில் புனிதநீரைச் சேகரித்தார்.
இந்த நிலையில் இன்று கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணியில் புனிதநீரைச் சேகரிக்கச் சென்றார். அங்கு சென்று புனித நீராடி புனிதநீர் எடுத்துச் சென்றார். மேலும் இன்று பிற்பகல் திருச்செந்தூர் கடலிலும், நாளை பவானியிலும் புனிதநீர் சேகரிக்கச் செல்ல உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுக பிரமுகருக்கு நிதி உதவி செய்த ராஜேந்திர பாலாஜி