கன்னியாகுமரி: "தோள் சீலை உரிமை" போராட்டத்தின் 200 ஆம் ஆண்டு நினைவு கருத்தரங்கம் நாகர்கோவிலில் தனியார் மண்டபத்தில் நேற்று (டிச.17) நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள், மத குருக்கள் பங்கேற்று பேசினர்.
இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், இந்தியாவில் உள்ள மக்களை பிற்போக்கான வழியில் இழுப்பதற்கான முயற்சி தற்போது நடைபெற்று வருகிறது. மனுஸ்மிருதி உள்ளிட்ட சட்டங்கள் மனிதர்களை அடிமையாக நடத்தக்கூடியது.
இதிலிருந்து மீண்டுவந்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கம் நடைபெற்றது என்றார்.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக - பாஜக கூட்டணி அமையும் என்று சி.வி.சண்முகம் எம்.பி பேசியதற்கு பதிலளித்த அவர், பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை. மயக்கத்தில் இருக்கும் ஆட்கள் உளறுவதற்கு பதில் கூற முடியாது. அதிமுக, பாஜகவை கழற்றி விடுவார்களா? அல்லது பாஜக கழற்றி விடுகிறதா என்பது தெரியவில்லை.
அதிமுகவுக்கு தலைவரும் இல்லை, கொள்கையும் இல்லை என்னும் நிலையில் தடுமாறி கொண்டு இருக்கிறது. அதன் காரணமான விரக்தியின் விளிம்பில் அவர்கள் உள்ளனர் என தெரிவித்தார்.
மேலும், அதிமுக - பாஜக உறவு என்பது எலிக்கும் தவளைக்கும் உள்ள உறவு எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்தார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானிடம் அணு ஆயுதமிருப்பதை இந்தியா மறந்துவிடக் கூடாது: ஷாஜியா மர்ரி எச்சரிக்கை