கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொண்டு வரும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை, அரசு ஆயூர்வேத மருத்துவமனை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, ஆக்சிஜன் தேவை, நோயாளிக்கு வழங்கப்படும் உணவு ஆகியவை குறித்த தகவல்களை கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், மேற்கொள்ளப்பட வேண்டிய கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆட்சியர் அரவிந்த், சுகாதாரத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதையும் படிங்க : ’கோவாக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஜூலைக்குள் ஒப்புதல் தரும்’ - பாரத் பயோடெக் நம்பிக்கை