நாகர்கோவிலில் கன்னியாகுமரி அனைத்து ஜாமத் கூட்டமைப்பின் சார்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில், கலந்துகொண்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா கண்டன உரை நிகழ்த்தினர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "குடியுரிமை திருத்தச் சட்ட மசோதவை பாஜக மக்களவையில் நிறைவேற்றிய சமயத்தில் தான் ஜார்க்கண்ட் தேர்தல் நடைபெற்றது. ஜார்க்கண்ட் மக்கள் மோடிக்கும் அமித் ஷாவுக்கும் சரியான பாடம் புகட்டியள்ளனர்.
மத்திய அரசின் இந்த பாசிச போக்கால் கடந்த ஓராண்டில் மட்டும் ஐந்து மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது சென்னை மாநகர காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் மாநில அரசு ஜனநாயக ரீதியாக நடக்கும் போராட்டத்தை அங்கீகரிக்க மறுக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: லோ பட்ஜெட் ஸ்டாலினை அழைத்து வந்து பரப்புரை: திமுகவினர் அட்ராசிட்டி!