ETV Bharat / state

பூட்டிய வீட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு - காவல்துறை விசாரணை! - காவல்துறை விசாரணை

குமரி: வடக்கு தாமரை குளம் அருகே பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

male-corpse-recovered-inside-locked-house-police-investigation

author img

By

Published : Oct 15, 2020, 4:51 PM IST

குமரி மாவட்டம் வடக்கு தாமரை குளம் மெயின் ரோடு அருகில் உள்ள ஒரு வீட்டிலிருந்து இன்று காலை துர்நாற்றம் வீசியுள்ளது. பின்னர் இதுகுறித்து தென் தாமரை குளம் காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், துர்நாற்றம் வீசிய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதையடுத்து சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடலை உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், இறந்தவரின் பெயர் மன்னபெருமாள் (62) என்பதும், அவர் தனியார் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது. இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அவர்களில் இரு மகள்களுக்கும், ஒரு மகனுக்கு திருமணமாகியுள்ளது.

மன்னபெருமாள் தனது மனைவி, இரண்டாவது மகனுடன் வீட்டில் வசித்துவந்துள்ளார். கடந்த வாரம் இவரது மனைவி மற்றும் மகன், பூதப்பாண்டியிலுள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனால் மன்னபெருமாள் வீட்டில் தனியாக இருந்தாக தெரியவந்துள்ளது.

வீட்டில் தனியாக இருந்த மன்னபெருமாள், மாரடைப்பால் இறந்தாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பூட்டிய வீட்டிலிருந்து அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பள்ளி மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு: இளைஞர் போக்சோவில் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.