ETV Bharat / state

பெண்களின் ஆபாச படங்களை பரப்பியவருக்கு பிணை!

author img

By

Published : Sep 22, 2020, 6:02 PM IST

மதுரை: இளம் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியதற்காக கைதுசெய்யப்பட்ட நாகர்கோவிலைச் சேர்ந்த காசியின் நண்பன் தினேஷுக்கு உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை
உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர்கள் காசி, தினேஷ். இவர்கள், இளம்பெண்களை மயக்கி, ஆபாசமாகப் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியது குறித்த புகாரின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில், தினேஷ் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் பிணை கோரி மனு ஒன்றை தாக்கல்செய்தார்.

அதில், “நாகர்கோவிலைச் சேர்ந்த பெண் ஒருவர், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் என் மீது தகவல் தொழில்நுட்ப பிரிவுகளைத் தவறாகப் பயன்படுத்திய சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனடிப்படையில் கடந்த ஜூன் மாதம் காவல் துறையினர் என்னை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

சென்னையிலுள்ள சட்டக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துவருகிறேன். என் மீது கொடுக்கப்பட்ட பொய்யான புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், நான் சிறையிலிருந்து வருந்துகிறேன், எனவே தனக்கு பிணை வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு இன்று நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர் மனுதாரருக்கு பிணை கொடுக்க எதிர்ப்புத் தெரிவித்தார். மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருவதாகவும் அவர்களிடமிருந்து பறிமுதல்செய்யப்பட்ட மடிக்கணினியில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் தவறான முறையில் நடந்தது தெரியவந்ததாகவும் கூறினார். இவர்கள் மீது மேலும் சில வழக்குகள் உள்ளது எனக் கூறி பிணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

பின்னர், மனுதாரர் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர் கூறியதாவது, “இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு 90 நாள்களைக் கடந்துவிட்ட சூழ்நிலையில் தனிப்பிரிவு காவல் துறையினர் விசாரணை அலுவலர் குற்றப்பத்திரிகையை, இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே மனுதாரருக்கு பிணை வழங்க வேண்டும்” என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவுசெய்த நீதிபதிகள், இந்த வழக்கை விசாரணை செய்துவரும் சிபிசிஐடி காவல் துறையினர், வழக்கின் தீவிரத்தன்மையை புரிந்துகொள்ளாமல் விசாரணையை மிகவும் மந்தமாக நடத்திவருகின்றனர்.

மேலும், வழக்குப்பதிவு செய்த 90 நாள்கள் கடந்துள்ள சூழ்நிலையில் விசாரணையை ஏன் சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை, குறைந்தபட்சம் இடைக்கால அறிக்கையாவது தாக்கல் செய்திருக்கலாம் என்று கேள்வி எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து மனு தாக்கல்செய்த தினேஷ், கைதுசெய்யப்பட்டு 90 நாள்களை கடந்துவிட்டதால், அவருக்கு பிணை வழங்கி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், “இதுபோன்ற வழக்குகளில் காலதாமதம் செய்துவந்தால், அனைத்து குற்றவாளிகளும் பிணை பெற்று தப்பித்துவிடுவார்கள்” என நீதிபதி கூறினார்.

தொடர்ந்து, வழக்கின் விசாரணை அலுவலரான சிபிசிஐடி அலுவலர், வழக்கின் விசாரணை விவரங்களை நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: மாவோயிஸ்ட் டேனிஷுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.