ETV Bharat / state

ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு

author img

By

Published : Jun 8, 2021, 7:21 PM IST

கன்னியாகுமரி: பூதப்பாண்டி அருகே, ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோ மீது லாரி மோதி விபத்து
ஆட்டோ மீது லாரி மோதி விபத்து

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே கீழ ஈசாந்திமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (47) லோடு ஆட்டோ டிரைவரான இவரும் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (24), வடமாநிலத்தை சேர்ந்த சஞ்சய் (26) ஆகிய மூன்று பேரும் மார்பிள் எடுப்பதற்காக நாவல்காடு பகுதிக்கு சென்றனர்.

அங்கிருந்து மார்பிள்களை ஆட்டோவில் ஏற்றி கொண்டு ஈசாந்திமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். சுடலைமாடன் கோவில் அருகே சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவின் முன்பகுதி நொறுங்கிய நிலையில், மூன்று பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

இதனையடுத்து, காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் குமரனும், சுபாஷும் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த சஞ்சய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து பூதப்பாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: EXCLUSIVE: 'தமிழ்நாட்டில் நீட் வராமல் இருக்க நடவடிக்கை எடுப்போம்' - அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.