கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள மொட்டவிளை கிராமத்தைச் சேர்ந்த ஊர் தலைவர் செல்லத்துரை. இவர் இரணியல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், "கல்குளம் வட்டம் குருந்தன்கோடு ஏ வில்லேஜ் கட்டிமாங்கோடு ஊராட்சியின் 10ஆவது வார்டுக்கு உட்பட்ட மொட்டவிளை பகுதியில், பஞ்சாயத்து நிதியில் அமைக்கப்பட்ட குடிநீர் கிணறு நீண்ட காலமாக மக்கள் பயன்பாட்டில் இருந்தது.
கடந்த 31.12.2020 முதல் கிணற்றை காணவில்லை. சிலர் கிணற்றை மண் நிரப்பி கிணறு இருந்த இடத்தை சமதளமாக்கி, அதை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் ஊர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து கட்டிமாங்கோடு ஊராட்சித் தலைவர், குருந்தன்கோடு ஏ வில்லேஜ் கிராம நிர்வாக அலுவலர், கல்குளம் வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்களிடம் நேரில் சென்று மனு கொடுத்து விளக்கியும், ஆவணங்களை காட்டியும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே கிணறு இருந்த பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியிருந்தார். மேலும், இரணியல் காவல் நிலையத்தில், இந்த புகார் மனு மீது கிணறு தோண்டிய ரசீதும் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கழிவறை கட்டிய ரசீது இருக்கு; ஆனால் கழிவறையைக் காணோம்!