ETV Bharat / state

அடிப்படை வசதி செய்துதரக்கோரி லேப் டெக்னீசியன் மாணவர்கள் திடீர் போராட்டம்! - kanniyakumari news

கன்னியாகுமரி: நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படிக்கும் லேப் டெக்னீசியன் மாணவர்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடிப்படை வசதி தர கோரி லேப் டெக்னீசியன் மாணவர்கள் திடீர் போராட்டம்!!

author img

By

Published : May 24, 2021, 8:12 PM IST

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் இரண்டு ஆண்டுகள் பட்டயப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை எனக் கூறி, இன்று (மே.24) காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போரட்டத்தில் 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபட்டனர். இதில், பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். அதன்படி லேப் டெக்னீசியன் மாணவர்கள் கரோனா நோயாளிகள் தங்கும் அறை அருகே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், முறையான உணவு வழங்கப்படவில்லை. பல மாணவர்கள் காசு கொடுத்து உணவு வாங்கி உண்ணும் நிலையில் உள்ளனர்.

தண்ணீர், முகக்கவசம் போன்ற எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. இது தொடர்பாக புகார்கள் அனுப்பினால் சான்றிதழ் வாங்க முடியாதபடி செய்துவிடுவதாக, கல்லூரி நிர்வாகம் மிரட்டி வருகிறது. இதை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 'எந்தக் கட்சியாக இருந்தாலும் சேவை செய்வதுதான் என் கடமை' அதிமுக முன்னாள் அமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.