ETV Bharat / state

குமரி அருகே கொளுந்துவிட்டு எரிந்த குடிசை! மூதாட்டி சாவு

நாகர்கோவில்: தென்தாமரைக்குளம் பால்பண்ணை அருகே குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததில், மூதாட்டி தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

Kumari cottage fire accident
author img

By

Published : May 4, 2019, 11:56 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி அம்பாள் (83). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதில் லட்சுமணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அம்பாள் தனது உறவினரான சந்திரனின் வீட்டருகே குடிசை அமைத்து வசித்துவந்தார்.

இந்நிலையில் அந்த குடிசை நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் குடிசை வீடு முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அம்பாளும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தென்தாமரைக்குளம் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இத்தகவலின் அடிப்படையில் கன்னியாகுமரி காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

குமரி அருகே குடிசை தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி உயிரிழப்பு!

மேலும் இந்த தீ விபத்து தற்செயலாக நடைபெற்றதா? இல்லை யாரேனும் அடையாளம் தெரியாத நபர்கள் வேண்டுமென்றே குடிசையை தீயிட்டு கொளுத்தி விட்டார்களா? என்பது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.

TN_KNK_01_04_FIRE IN THE COTTAGE_GODDESS KILLS_SCRIPT_TN10005 எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி தென்தாமரைக்குளம் பால்பண்ணை அருகே நள்ளிரவில் குடிசை வீடு தீப்பற்றி இருந்ததில் உள்ளே கட்டிலில் உறங்கி கொண்டிருந்த மூதாட்டி தீயில் கருகி பரிதாபமாக இறந்தார். இந்த தீ விபத்து தற்செயலாக நடைபெற்றதா இல்லை மர்ம நபர்கள் கைவரிசையா என்பது குறித்து தென்தாமரைக்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமண நாடார். இவரது மனைவி அம்பாள்(83). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் லட்சுமண நாடார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அம்பாள் தனது உறவினரான சந்திரனின் வீட்டருகே குடிசை அமைத்து வசித்து வந்தார். இந்நிலையில் நள்ளிரவில் திடீரென குடிசை தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். அனால் அதற்குள் குடிசை வீடு முற்றிலுமாக எரிந்து நாசமானது. உள்ளே சென்று பார்த்தபோது கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த அம்பாள் தீயில் கருகி பரிதாபமாக இறந்து கிடந்தார். இதுகுறித்து தென்தாமரைக்குளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இத்தகவலின் பேரில் கன்னியாகுமரி காவல் ஆய்வாளர் முத்து சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த தீ விபத்து தற்செயலாக நடைபெற்றதா? இல்லை யாரேனும் மர்ம நபர்கள் வேண்டுமென்றே குடிசையை தீயிட்டு கொளுத்தி விட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். விஷுவல்:தென்தாமரைக்குளம் காவல் நிலையம், தீயில் முற்றிலும் எரிந்து நாசமான குடிசை காட்சிகள்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.