கன்னியாகுமரி: குளச்சல் முதல் குஜராத் வரை உள்ள அரபிக் கடல் பகுதிகளில் 61 நாள்கள் மீன்பிடி தடைகாலம் தொடங்கியது. இதனால், குளச்சல் முதல் நீரோடி வரை அனைத்தும் கரை ஒதுக்கப்பட்டுள்ளன. குளச்சல் துறைமுகத்தில் இடநெருக்கடி காரணமாக ஏராளமான விசைப்படகில் கேரள துறைமுகங்களில் கொண்டு கரை ஒதுக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
ஆழ் கடலில் மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் கிழக்கு கடல் பகுதிகளில் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் எதிர்வரும் ஜூன் 15ம் தேதி வரை 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து, “விசைப்படகுகளை குளச்சல் துறைமுகத்தில் கரை ஒதுங்கி பராமரிப்பதற்காக வசதிகள் எதுவும் இல்லை எனத் தெரிவித்த மீனவர்கள், விசைப்படகுகளை பராமரிப்பு பணிக்காக கேரளாவிற்கு கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், குளச்சலில் துறைமுகத்தை விரிவாக்கம் செய்து படகுகள் பராமரிப்பு பணிக்காக ஏடு வசதிகளை அரசு இந்த தடை காலத்தில் செய்து தரவேண்டும் என குளச்சல் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:குளச்சல் சுற்றுவட்டார கடல் பகுதிகளில் காற்றுடன் மழை: கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத மீனவர்கள்