குமரி மாவட்டம் கீழ்குளம் பேரூராட்சிக்குட்பட்ட மக்களின் நீர் ஆதாரமாக வண்ணாங்குளம் விளங்கியது. இந்த குளமானது பல வருடங்களாக தூர்வாரப்படமால் இருக்கிறது. இதனால் இந்தக்குளம் மாசடைந்து சுகாதார கேடு ஏற்பட்டு அப்பகுதி மக்களுக்கு நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் உள்ள ஐந்து ஊர்களின் நீர் ஆதாரமாக விளங்கும் வண்ணாங்குளம் தூர்வாரப்படாததால் சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்களில் விவசாயிகள் பயிரிட முடியாமல் தவிக்கின்றனர். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று வண்ணாங்குளத்தை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று கீழ்குளம் பகுதி ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அந்த ஊர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஐயம் வாட்ச்சிங் யூ... சிசிடிவியில் சிக்கிய டயர் திருடர்கள்!