ETV Bharat / state

பெண்ணிடம் நகை பறித்த கேரள இளைஞர் சிறையில் அடைப்பு - Kanyakumari district news

கன்னியாகுமரி: பெண்ணிடமிருந்து 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து தப்பிச் சென்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சிறையில் அடைப்பு

author img

By

Published : Jan 7, 2021, 6:38 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் தேவிகோடு பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமாரி. முக்கூடல் பகுதியில் நடந்து சென்றபோது, இவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கலியை ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத நபர் பறித்துவிட்டு தப்பிச் சென்றார்.

இது தொடர்பாக வசந்தகுமாரி அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துணை ஆய்வாளர் சாமுவேல், அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்.

அதன்பின்னர் நடந்த விசாரணையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்தவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஷாபி என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: லாரி ஓட்டுநர் வீட்டில் 16 சவரன் நகை திருட்டு - காவல் துறை தீவிர விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.