கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்க் தெருவைச் சேர்ந்த ஜோசப், தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவர்களுக்குப் பல கோடி ரூபாய் சொத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சொத்துகளை அபகரிக்க கடந்த சில நாள்களாக இவரை கொலைசெய்யும் நோக்கில் இவரது தந்தை, அண்ணன் விஷம் கலந்த பானங்களை கொடுத்து கொலைசெய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இதனால், தனது தந்தை, அண்ணனிடமிருந்து தன்னைப் பாதுகாக்கக் கோரி பலமுறை மனு அளித்தும், அவர்கள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், தனது அண்ணனும் தந்தையும் இணைந்து கொலைசெய்ய பல்வேறு வகைகளில் திட்டமிட்டுவருகிறார்கள். அவர்களிடமிருந்து தன்னைப் பாதுகாக்கவும் மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று (ஜன. 08) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக ஜோசப் வந்தார்.
அப்போது அவர் திடீரென காவல் துறையினரின் காலில் விழுந்து தன்னை காப்பாற்ற வலியுறுத்தி கதறி அழுது உருண்ட காட்சி அனைவரையும் பதைபதைக்க வைத்தது. இந்தச் சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க...மயிலாடுதுறையில் உதயநிதியின் உருவ பொம்மை எரிப்பு