கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளையில் அமைந்துள்ள மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்கள் தலையீடு அதிகரித்து வருவதாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்கானிப்பாளர் மதியழகன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்றது. இதில் ரூ.85 ஆயிரம் அலுவலர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது. இச்சம்பவம் மார்த்தாண்டம் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: வருமானவரித் துறை அலுவலகத்தில் அர்ச்சனா கல்பாத்தி நேரில் ஆஜர்