ETV Bharat / state

குமரியில் வேன்-பைக் மீது கவிழ்ந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு! - Kanyakumari van-bike accident

கன்னியாகுமரி: மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த வேன், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில், ஒருவர் உயிரிழந்தார்.

குமரியில் வேன்-பைக் மீது கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு!
author img

By

Published : Oct 12, 2019, 7:31 PM IST

கேரளமாநிலம் பாறசாலாவிலிருந்து, நாகர்கோவிலை நோக்கி ராகேஷ் (19), அவரது தாயார் சுஜிதா குமாரி (40) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது மார்த்தாண்டம் மேம்பாலத்தில் களியக்காவிளை நோக்கி பயணிகள் ஏற்றி சென்றுகொண்டிருந்த வேன், டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி சரிந்து ராகேஷின் பைக் மீது மோதி விழுந்தது.

இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேஷ், சுஜிதா குமாரி பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து இருவரும் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் ராகேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர். படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வரும் சுஜிதா குமாரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குமரியில் வேன்-பைக் மீது கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

இந்த விபத்து குறித்து மார்த்தாண்டம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மேம்பாலம் வழியாக போக்குவரத்துக் காவல் துறையில் விதிக்கப்பட்ட வேகத்தை விட, அதிக வேகத்தில் வேன் வந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் கூறுகின்றனர்.

மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய, வேன் டிரைவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:

மத்திய சிறையில் கைதி தூக்கிட்டுத் தற்கொலை

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் இன்று நடைபெற்ற வாகன விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் உயிர் இழந்தார். அவருடன் வந்த அவரது தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய வேன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Body:குமரி மாவட்டம் பாறசாலையிலிருந்து நாகர்கோவில் நோக்கி ராகேஷ் (19) மற்றும் அவரது தாயார் சுஜிதா குமாரி (40) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
இவர்களது வாகனம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது, மார்த்தாண்டத்தில் இருந்து களியக்காவிளை நோக்கி சென்ற பயணிகள் ஏற்றி செல்லும் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி சரிந்து ராகேஷின் பைக் மீது மோதி விழுந்தது.
இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேஷ் மற்றும் சுஜிதா குமாரி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து இருவரும் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு ராகேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வரும் சுஜிதா குமாரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த மேம்பாலம் வழியாக போக்குவரத்து காவல் துறை விதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வேன் வந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் கூறுகின்றனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய வேன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.