ETV Bharat / state

சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் கொடியேற்றம்! - temple flag hoisting for 11 day Aavani festival

கன்னியாகுமரி: சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா இன்று (ஆக. 21) காலை கொடியேற்றத்துடன் இனிதே தொடங்கியது.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் கொடியேற்றம்!

author img

By

Published : Aug 21, 2020, 4:43 PM IST

தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியும் ஒன்று.

இங்கு வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் ஆவணித் திருவிழா இன்று (ஆக. 21) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால், குறைந்தளவு பக்தர்கள் கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அரசின் வழிகாட்டுதலின் படி தகுந்த இடைவெளிவிட்டு முகக்கவசம் அணிந்து கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று (ஆக. 21) அதிகாலை முத்திரிபதமிட்டு திருநடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அய்யாவுக்கு பணிவிடையும், கொடிப் பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சியும் அதன்பின்னர் திருக்கொடியேற்றமும் நடைபெற்றது.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் கொடியேற்றம்!

திருக்கொடியை பால பிரஜாபதி அடிகளார் ஏற்றி வைத்தார். இதில் பக்தர்கள் தகுந்த இடைவெளியை கடைபிடித்து கலந்துகொண்டனர்.

திருவிழா கொடியேற்றத்தின்போது அய்யாவழி மக்கள், காவி உடையணிந்து தலையில் தலைப்பாகை அணிந்தபடி, “அய்யா சிவ சிவ சிவ சிவா அரகரா அரகரா சிவ சிவ சிவ சிவா அரகரா அரகரா” என்று பக்தி கோஷமிட்டனர்.

விழா நாள்களில் தினமும் காலை-மாலை பணிவிடையும் மதியம் உச்சிப்படிப்பு, உகப்படிப்பு ஆகியவை நடைபெறுகிறது.

இதையும் படிங்க...வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் விநாயகப் பெருமான்! - முதலமைச்சர் வாழ்த்து

For All Latest Updates

TAGGED:

Samithoppu
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.