ETV Bharat / state

டிக்கெட் சூப்பர்வைசரை எலி கடித்ததால் பரபரப்பு

author img

By

Published : May 11, 2019, 6:50 PM IST

நாகர்கோவில்: கன்னியாகுமரி ரயில் நிலையத்தில், டிக்கெட் சூப்பர்வைசரை எலி கடித்துள்ளது. ஆனால், பாம்பு கடித்ததாக அவர் தவறுதலாக கூறியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரியில் டிக்கெட்டி சூப்பர்வைசரை எலி கடித்ததில் பரப்பரப்பு

கன்னியாகுமரி ரயில் நிலையத்திலுள்ள டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் சூப்பர்வைசராக சுனில்(45) என்பவர் வேலை செய்து வருகிறார்.

இன்று காலையில் பயணிகளுக்கு வழங்கும் டிக்கெட் படிவங்கள் தீர்ந்து போனதால் அதை எடுப்பதற்காக. ரயில் நிலைய சேமிப்பு அறைக்கு அவர் சென்றுள்ளார். அங்கிருந்த பீரோவை திறந்துபோது, கையில் ஏதோ கடித்துவிட்டு பாம்பு போல் நெளிந்து சென்றுள்ளது. இதனால் அறைக்கு வெளியே வந்து, பாம்பு கடித்து விட்டதாக சுனில் கூறியுள்ளார். இதனால் சக ஊழியர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

கன்னியாகுமரியில் டிக்கெட்டி சூப்பர்வைசரைக் கடித்த எலி

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், கடிவாயைப் பார்த்துவிட்டு, இது பாம்பு கடித்தது இல்லை; எலி கடித்த அடையாளம்தான் என்று கூறி சிகிச்சையளித்துவிட்டு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து ரயில் நிலையம் விரைந்த தீயணைப்பு வீரர்கள் ரயில் நிலைய சேமிப்பு அறையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து எலிகள் ஓடியுள்ளன.

ஆனால், கடித்ததாக கூறப்படும் பாம்பை காணவில்லை இதனால் ரயில்வே ஊழியரை கடித்தது பாம்பு இல்லை எலி என்று கூறிவிட்டு திரும்பிச் சென்றனர். இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

TN_KNK_01_11_RAILWAYSTATION_PARAPARPPU_SCRIPT_TN10005 எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி கன்னியாகுமரி ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் பணிபுரியும் சுனில்(45) என்பவர் டிக்கெட் நிரப்பும் படிவ புத்தகம் எடுக்க அங்குள்ள அறைக்கு சென்ற போது பாம்பு கடித்ததாக கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் வந்து செல்ல வசதியாக ரயில் நிலையம் உள்ளது. இங்கு டிக்கெட் கவுண்டரில் டிக்கெட்டிங் சூப்பர்வைசராக சுனில்(45) என்பவர் வேலைசெய்து வருகிறார்.இந்நிலையில் இன்று காலை டிக்கெட் எடுக்க நிரப்பி கொடுக்கும் படிவம் தீர்ந்து போனதால். அங்குள்ள சேமிப்பு அறைக்கு சென்று படிவ புத்தகம் எடுக்க அங்குள்ள பீரோவை திறந்துள்ளார் அப்போது எதோ கடித்துவிட்டு பாம்பு போல் நெளிந்து சென்றுள்ளது. இதனால் பாம்பு கடித்துவிட்டதாக சுனில் கூறியுள்ளார். இதனால் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துவிட்டு சக ஊழியர்கள் அவரை கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கடிவாயை பார்த்துவிட்டு இது பாம்பு கடித்தது இல்லை எலி கடித்த அடையாளம்தான் என்று கூறி சிகிச்சையளித்துவிட்டு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து ரயில்நிலையம் வந்த தீயணைப்பு வீரர்கள் ரயில் நிலைய சேமிப்பு அறைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து எலிகள் ஓடியுள்ளன.ஆனால் கடித்ததாக கூறப்படும் பாம்பை காணவில்லை. இதனால் ரயில்வே ஊழியரை கடித்தது பாம்பு இல்லை எலி என்று கூறிவிட்டு திரும்பி சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.