ETV Bharat / state

'காங்கிரஸ், திமுகவினருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது' - பொன். ராதாகிருஷ்ணன் - BJP candidate Jayaseelan from Vilavankodu constituency

கன்னியாகுமரி: "குமரி துறைமுக விவகாரத்தில் வாதம் செய்ய தயார், விதண்டாவாதமும் செய்யலாம். ஆனால் காங்கிரஸ், திமுகவினருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது" என பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் பரப்புரை

author img

By

Published : Mar 27, 2021, 6:28 AM IST

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி பாஜக வேட்பாளர் ஜெயசீலனை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் வருமானவரித்துறை சோதனை நடப்பது சாதாரணமான ஒன்றுதான்.

நான் இங்கு வரும்போது இரண்டு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். ஸ்டாலின் அறையில் சோதனை செய்ததை பொறுத்தவரையில் அவர் அங்கு இருக்கும்போதோ அல்லது அவரது சொந்த அறையிலோ சோதனை செய்யவில்லையே.
கருத்துகணிப்புகளை பொருத்தவரையில் இதற்கு முனபும் பல கருத்துகணிப்புகள் வந்துள்ளது. எல்லாம் பொய்த்து போயுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியில் மோடி படங்களை புறங்கணிப்பது குறித்து எனக்கு தெரியாது. ராஜேந்திரபாலாஜி உள்பட பல அமைச்சர்கள் தொகுதியில் பாஜக மத்திய அமைச்சர்களை புறக்கணிப்பதாக கூறுவதையும் ஏற்க முடியாது.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் பரப்புரை
குமரி துறைமுக விவகாரம் சம்மந்தமாக எந்த கேள்விக்கு நான் வாதம் செய்ய தயார், விதண்டாவாதம் செய்தாலும் பரவாயில்லை. ஆனால் காங்கிரஸ் திமுகவிற்கு சாதகமான சிலருக்கு பக்கவாதம் ஏறபட்டுள்ளது. காங்கிரஸ் பி டீமாக சிலர் செயல்படுகிறார்கள். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்தவரையில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. தேர்தல் முடிந்த பிறகு குதிரைபாய்ச்சலில் இதற்கு தீர்வு காண்போம்" என்று தெரிவித்தார்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.