கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தொகுதியில் முக்கியமான பிரச்னையாக என் கவனத்திற்கு வந்தது நாகர்கோவில் தண்ணீர் பிரச்னை. அங்கு பத்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கப்படுகிறது. சரியான நேரத்திற்கு தண்ணீர் வரவில்லை. அவசரகால தேவை என்பதால் அவசரமாக நடவடிக்கை எடுத்து தாகத்தை தீர்க்க வேண்டும்.
அடுத்து வேலை இல்லா திண்டாட்டத்தை ஒழிப்போம். அதற்காக நான்கு இடங்களில் எனது கடைகளில் பாக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில், பயோடேட்டாவை போட்டால் அதனை சரிபார்த்து பயிற்சி கொடுத்து வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கலாம்.
சுற்றுலாத்தளங்களுக்கு மக்கள் அதிகளவு வர வேண்டும். கன்னியாகுமரியில் அதிக தங்கும் விடுதிகள் இருப்பதால் அதிலுள்ள கழிவு கடலில் கலக்கின்றன. குமரி மாவட்டத்தின் கனிமவளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
குமரி மாவட்டத்தில் பல குளங்களை காணவில்லை, இருக்கின்ற குளங்களில் ஆக்கிரமிப்பை அகற்றி, ஆழப்படுத்த வேண்டும். நாங்குநேரியில் 51 குளங்களை ஆழப்படுத்தினேன். அதுபோன்ற திட்டத்தை செயல்படுத்த கலெக்டரிடம் பேசி குளங்களை தூர்வார நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.