தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றும், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் எனவும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில் கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின், நியாயவிலை கடைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது நியாவிலை கடைகளில் தரமற்ற அரிசி பொதுமக்களுக்கு வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தரமான அரிசியை வழங்க வட்ட வழங்கல் அலுவலர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்க வேண்டிய பொருள்களை முறையாக வழங்க வேண்டும் எனவும் ஒருசில பொருள்கள் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க...கேரள செவிலியர்களுக்கு தலை வணங்குகிறேன்!