ராணுவத்தில் பணியாற்றிவரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் கன்னியாகுமரி ஜவான்ஸ் என்ற அமைப்பின் மூலமாக மாவட்டம் முழுவதும் பொது இடங்களை தூய்மை படுத்தி, பசுமை பரமாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த அமைப்பின் சமூகநல பணிகள் அரசு தரப்பிலும் பொதுமக்கள் தரப்பிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் 25வது களப்பணியாக ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிதிலமடைந்த இரணியல் அரண்மனையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ராணுவ வீரர்கள் கூறியதாவது "அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குமரி மண்ணின் இந்த வரலாற்று தலத்தை அரசு பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி மின்ஊழியர் பலி.!