ETV Bharat / state

கன்னியாகுமரி மின்வாரியத்தில் தடைபட்டுள்ள வளர்ச்சி... தொழிற்சங்கங்களின் குற்றச்சாட்டால் அதிர்ச்சி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மின் வாரியத்தில் மேம்படுத்த வேண்டிய பணிகளுக்கு அதிகாரிகள் டெண்டர் விடாமல் இருப்பதாலும், பணியிட மாற்ற முறை கேடுகளாலும், மக்களுக்கு அளவுக்கு அதிகமான அபராதங்கள் விதிப்பதாலும் மின்வாரிய வளர்ச்சி தடைபட்டுள்ளதாக ஆளும்கட்சி தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

In Kanyakumari the development work of the electricity board has been stalled ruling party union accused
கன்னியாகுமரியில் தடைபட்டுள்ள வளர்ச்சி; ஆளும்கட்சி தொழிற்சங்கத்தின் புகாரால் அதிர்ச்சி!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 9:41 AM IST

Kanyakumari Elecricity Board Union Members Criticize District head incharge

கன்னியாகுமரி: மின்வாரியத்தில் ஊழியர் பற்றாக்குறை, மின்னழுத்த குறைபாடுகள், களப்பணியாளர்கள் பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்சினைகளில் கன்னியாகுமரி மாவட்டம் சிக்கி தவித்து வருவதாத பல்வேறு தொழிற்சங்கங்களால் ஏற்கனவே புகார் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆளுங்கட்சி தொழிற்சங்கமே, மின்வாரிய வளர்ச்சி தடைபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது பயனீட்டாளர்களை அதிர்ச்சி அடையை செய்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சுமார் 53 மின் வாரிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. குறைந்தபட்சம் ஒவ்வொரு
செக்சனுக்கும் 8,000 மின் இணைப்புகள் முதல் அதிகபட்சமாக 15 ஆயிரம் மின் இணைப்புகள் இருப்பது வழக்கம். அதிலும் வல்லன், குமாரவிளை போன்ற செக்சன்களில் 20 முதல் 25 ஆயிரம் மின் இணைப்புகள் வரை உள்ளன. இதுபோன்று பல செக்சன்களிலும் கூடுதல் மின் இணைப்புகள் உள்ளதால் மின்னழுத்த குறைபாடுகள் இருந்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தவரை பெரும்பாலான இடங்களில் பழைய மின் கம்பங்கள் இன்னும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இவற்றை மாற்றி புதிய மின் கம்பங்கள் நிறுவ வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பழைய வயர்களை மாற்றி புதிய வயர்களை இணைக்க வேண்டும் என்றும், மின்னழுத்த குறைபாடுகளை தீர்க்க பழைய டிரான்ஸ்பார்மர்களை மாற்றி புதிய ட்ரான்ஸ்பார்மர்களை நிறுவ வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் புதிய மின்கம்பங்கள் நிறுவுவதற்கும், புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பது, பழைய வயர்களை மாற்றி புதிய வயர்களை இணைப்பது போன்ற பணிகளுக்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்த பின்னரும் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு இன்னும் டெண்டர் விடாமல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பத்மகுமார் என்பவர் காலதாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் கன்னியாகுமரி மின் பகிர்மான மாவட்டச் செயலாளரும் மாநில துணைப் பொதுச் செயலாளருமான விஜயகுமார் கூறியதாவது, "கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்வாரியம் கடந்த சில ஆண்டுகளாக நலிவுற்ற நிலையில் செயல்பட்டு வருகிறது. ஊழியர் பற்றாக்குறை, ஒப்பந்த பணிகளில் சுணக்கம் போன்ற பல்வேறு குறைபாடுகள் இருந்து வந்தன.

இந்நிலையில் தமிழக அரசு கன்னியாகுமரி மாவட்ட மக்களின் மின் தேவை பூர்த்தி செய்யவும், தேவைக்கேற்ற அழுத்தத்துடன் மின்சாரம் வழங்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒப்பந்த பணிகளுக்கான தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் பழைய மின் கம்பங்களை மாற்றி விட்டு புதிய மின் கம்பங்களை நட்டு மின் கம்பிகளை இழுத்து கட்டுவது, ட்ரான்ஸ்பார்மர் அமைப்பது, சைஸ் ஆஃப் கண்டக்டர் சேஞ்ச் எனப்படும் பழைய கம்பி வயர்களை மாற்றிவிட்டு புதிய கம்பி வயர்களை கட்டுவது போன்ற வகையில் 50 கோடி ரூபாய்க்கான டெண்டர் இன்னும் விடபடாமல் உயர் அதிகாரிகள் காலதாமதம் செய்து வருகின்றனர்.

மேலும், தகுதி இல்லாத நபர்களை வைத்து வீடுகளில் மின் இணைப்பு குறித்து சோதனை நடத்தி, அளவுக்கு அதிகமான அபராதங்கள் விதிப்பது, ஊழியர்களின் இடம் மாற்றங்களின் போது விதிகளை கடைபிடிக்காமல் செயல்படுவது போன்ற பல்வேறு பிரச்சனைகளும் மின்வாரியத்தில் நீடித்து வருகின்றன. இவற்றை எல்லாம் சரி செய்ய மின்துறை அமைச்சருக்கும், வாரிய தலைவருக்கும் கோரிக்கைகள் எடுத்து வைத்துள்ளோம்.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2,000 களப்பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மின்துறை அமைச்சர் மற்றும் வாரிய தலைவரிடம் வைத்த கோரிக்கை விரைவில் நடை முறைப்படுத்தப்பட உள்ளது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே 53 மின்வாரிய அலுவலகங்கள் உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் உள்ள சப் ஸ்டேஷன்கள் அதிக அளவில் நுகர்வோர்களை கொண்டதால் கூடுதலாக 12 மின்வாரிய அலுவலகங்கள் திறக்கவும் தொழிற்சங்கம் மூலம் வேண்டுகோள் விடுத்தனர். இதன் பலனாக அது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

கன்னியாகுமரி மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் பத்மகுமார் என்ற அதிகாரி ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் மாடல் விவகாரங்களில் தன்னிச்சையான போக்கை கடைபிடித்து வருகின்றார். ஆகையால் வரும் செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி மாலை கண்டனக் கருப்பு கொடிகட்டி போராட்டம் நடத்தி தமிழக முதலமைச்சர், அமைச்சர் மற்றும் மின்வாரியத்தின் கவனத்திற்கும் எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்க போராடுவோம்" எனத் தெரிவித்தார்.

மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்கள் வீடுகளுக்கு சென்று ஆய்வு என்ற பெயரில், தவறுகள் இல்லாத வீடுகளிலும் நிறுவனங்களிலும் தவறுகள் இருப்பதாக கூறி வீண் அபராதங்களை விதித்து பணம் கொள்ளை அடிப்பது போன்று வசூல் செய்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து ஞானசேகர் என்பவர் கூறும்போது, "6 மாதம் முன்பாக தனது வீட்டின் மேல் மாடியில் உள்ள வீட்டினை வாடகைக்கு கொடுப்பதற்காக தனி மீட்டர் வேண்டி விண்ணப்பித்து இருந்தேன். அந்த விண்ணப்பத்தை கண்டு கொள்ளாமல் மூன்று மாதம் கழிந்த பின்னர் ஆய்வு என்ற பெயரில் இரு களப்பணியாளர்கள் வந்து பார்த்துவிட்டு ஆய்வு செய்ததற்கான கையெழுத்து போடுங்கள் என ஒரு பேப்பரை காண்பித்து கையெழுத்தை வாங்கினார்கள்.

ஒரு பத்து நாட்களுக்கு பின்பு எனக்கு 47 ஆயிரம் ரூபாய் அபராதம் போட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர். ஏற்கனவே நான் மனு அளித்த பின்பும் எனக்கு எதற்காக அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என அதிகாரியிடம் கேட்டால், இதுவரையிலும் எந்த பதிலும் எனக்கு தராத காரணத்தினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளேன். ஆறு மாத காலமாக இதற்காக அலைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

மாவட்ட அளவில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இடமாற்றம் செய்வது அரசினுடைய விதிமுறை. ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தின் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பத்மகுமார் என்பவர் வேறு மாவட்டத்திற்கு இடமாறுதல் வந்தாலும் அதனை சமாளித்து 36 ஆண்டுகளாக இடம் மாற்றமே இல்லாமல் பணியாற்றி வருவதாக அதிர்ச்சி தகவலையும் திமுக தொழிற்சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே போல மின்சார துறையில் பணியாற்றி வரும் அவரது மனைவியும் சுமார் 20 ஆண்டு காலமாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வருவதாகவும், அரசு வாகனங்களை தன் சொந்த வேலைகளுக்கு பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது . மின்வாரிய அலுவலகங்களில் பணியாற்றுவார்கள் பணியிடம் மாறுதல் கேட்டால் கூட அவர்களுடைய விண்ணப்பத்தை கிடப்பில் போட்டு விட்டு தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே இடமாற்றங்கள் செய்வதாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் தரப்பில் எடுத்துக் கொண்டால் திடீர் ஆய்வு என வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் சென்று எந்த விதமான குற்றமும் இல்லாத இடங்களில் கூட குற்றங்கள் இருப்பதாக கூறி 10 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதங்கள் தன்னிச்சையாக அதிகாரிகள் விதித்து வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.

இதனால் பொதுமக்கள் பலர் பாதிக்கபட்டு உள்ளதாக குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாகவும் ஏராளமான பொதுமக்கள் அரசுக்கு புகார் அளித்துள்ளனர். ஒரு சிலர் நீதிமன்றத்தையும் நாடி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகள் அத்துமீறல் சம்பவங்கள் டெண்டர் போடாமல் வேண்டியவர்களுக்கு மறைமுகமாக ஒப்பந்த பணிகளை கொடுத்து அதன் மூலம் பல லட்ச ரூபாய் லஞ்சமாக பெற்று வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதால் அரசு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் தொழிற்சங்கத்தினர் அரசுக்கு முன் வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: 20 ஆண்டுகளாக நிறைவேறாத கோரிக்கை.. ரத்தம் சிந்தும் போராட்டம் நடத்த சாலை பணியாளர்கள் சங்கம் முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.