ETV Bharat / state

இருசக்கர வாகன விபத்து: வெளியான சிசிடிவி காட்சி - லாரி மீது பைக் மோதி விபத்து

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த மெக்கானிக் உயிரிழந்தார். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

accident
accident
author img

By

Published : Feb 13, 2021, 6:26 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பம்மம் கல்லுதொட்டியை சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் அஜின் (26). இவர் மெக்கானிக் தொழில் செய்து வந்தார். அஜின் கோட்டாறில் இருக்கும் தனது உறவினரை பார்பதற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

உறவினரை பார்த்து விட்டு பின்னர் அஜின் இருசக்கர வாகனத்தில் வீடு திருப்பிக்கொண்டிருந்தபோது சுங்கான்கடையை அடுத்த களியங்காடு பகுதியில் வந்தபோது எதிரே திருவனந்தபுரத்திலிருந்து மதுரை நோக்கி வந்துகொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதியது. இதில் அஜின் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து காரணமாக நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சிசிடிவி காட்சி

விபத்து குறித்து தகவலறிந்த இரணியல் போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அஜினின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. சம்பவம் தொடர்பாக இரணியல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.