முருக பெருமானின் முக்கிய விழாக்களில் கந்தசஸ்டி விழா மிகவும் கோலாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். சூரசம்கார நிகழ்ச்சிகாக நடைபெறும் இந்த விழா, கந்தசஸ்டி விழாவாக ஒரு வாரகாலம் கொண்டாடப்படும். விழாவின் தொடக்க நாளான இன்று (நவம்பர் 15) முதல், முருகன் எழுந்தருளி உள்ள சன்னிதானங்களில் சென்று கையில் காப்பு கட்டி பக்தர்கள் விரதம் இருப்பர்.
அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயில் சன்னதியில் வீற்றிருக்கும் பால முருகன் கோயிலில் கந்தசஸ்டி விழா இன்று நடைபெற இருந்தது. ஆனால், கரோனா காரணமாக கந்தசஸ்டி விழாவுக்கு அரசு அனுமதி மறுத்துள்ளதாக பக்தர்கள் சங்கத்தினர் தெரிவித்தினர்.
குமரி மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் சஷ்டி விழாவுக்கு அனுமதி வழங்கியுள்ள தமிழ்நாடு அரசு, வரலாற்று சிறப்பு வாய்ந்த நாகராஜா கோயிலில் உள்ள பால முருகன் கோயிலிலுக்கு மட்டும் அனுமதி வழங்காதது பக்தர்களை ஏமாற்றமடைய செய்து உள்ளது.