ETV Bharat / state

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நிறை புத்தரிசி பூஜை விழா - Temple

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் நிறை புத்தரிசி பூஜை இன்று நடைபெற்றது .

கன்னியாகுமரி திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நிறை புத்தரிசி  பூஜை

author img

By

Published : Aug 4, 2022, 1:03 PM IST

Updated : Aug 4, 2022, 5:18 PM IST

கன்னியாகுமரி: நாடு முமுவதும் விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக விவசாயி தான் உற்பத்தி செய்த முதல் கதிரை இறைவனுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். அவ்வாறு படைக்கப்பட்ட நெற்கதிர்களை பெற்று வீடுகளுக்கு கொண்டு சென்றால் செல்வம் செழித்தோங்கும் என்பது ஐதீகம் .

சபரிமலை ஐயப்பன் கோயில் உட்பட, கேரளா ஐதீக முறைப்படி நிறைப்புத்தரிசி பூஜை கன்னியாகுமரி மாட்டத்தில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் இன்று நடைபெற்றது. இதில் சாமி சன்னதியில் நெற்கதிர்கள், மாவிலை, நொச்சி, உழிஞை உள்ளிட்ட மூலிகைகள் படைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

கன்னியாகுமரி திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நிறை புத்தரிசி பூஜை

அதைத்தொடர்ந்து, அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த நெற்கதிர்களை தங்களை வீடுகளில் கட்டுவதால் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்குமென்பது நம்பிக்கையாக உள்ளது. அதிகாலையில் நடைபெற்ற நிறைபுத்தரிசி பூஜையில் கேரளா தமிழ்நாட்டிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று நெற்கதிர்களை பிரசாதமாக பெற்று சென்றனர்.

இதையும் படிங்க: பசிலிகுட்டை முருகன் கோவில் ஆடிப்பெருக்கு திருவிழா..!

Last Updated : Aug 4, 2022, 5:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.