ETV Bharat / state

கோயில்களில் நடைபெறும் தொடர் திருட்டால் மக்கள் அச்சம்! - kanniyakumari ramar temple robbery

கரோனா ஊரடங்கு பல தளர்வுகளுடன் அமலில் உள்ளதால் கோயில்களில் பூஜைகள் நடத்த தடை இருந்துவருகிறது. இதனை கவனித்து வைத்துகொண்டு திருடர்கள் ஒரு வாரத்தில், ஐந்து கோயில்களில் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

kanniyakumari ramar temple robbery
kanniyakumari ramar temple robbery
author img

By

Published : Jul 7, 2020, 2:10 PM IST

கன்னியாகுமரி: குமரி பகுதியிலுள்ள கோயில்களில் நள்ளிரவில் நடைபெற்று வரும் தொடர் திருட்டுகளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் இந்து அறநிலையத்துறைக்குட்பட்ட அருள்மிகு ஸ்ரீ ராமர் கோயில் உள்ளது. இங்கு தினமும் அதிகாலையில் கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். தற்போது கரோனா ஊரடங்கு பல தளர்வுகளுடன் அமலில் உள்ளதால், கோயிலில் பூஜைகள் நடத்த தடை இருந்துவருகிறது.

இதனால் அதிகாலையில் கோயில் திறக்கப்பட்டு பின்னர் அடைக்கப்பட்டு வருகிறது. இச்சூழலில் வழக்கம்போல் இன்று காலை கோயிலை திறப்பதற்காக பூஜாரி கோயிலுக்கு வந்தபோது, கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பூஜாரி உள்ளே சென்று பார்த்தபோது, பெரிய உண்டியல், அலமாரி உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருள்கள் சிதறிக்கிடந்துள்ளது.

கூலிப்படையை ஏவி இளைஞர் மீது தாக்குதல் - அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்!

மேலும் உண்டியலில் இருந்த பணத்தையும் அங்கிருந்த எரிவாயு உருளை, எரிவாயு அடுப்பு போன்ற சில பொருள்களையும் காணவில்லை. இதனால் இது தொடர்பாக பூஜாரி கன்னியாகுமரி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலின்பேரில் கன்னியாகுமரி காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் அதன் அருகிலுள்ள அய்யா வைகுண்டசாமி பதியின் கதவையும் உடைத்து திருட முயன்றுள்ளனர். ஆனால் கதவை உடைக்க முடியாததால் அங்கிருந்த திருடர்கள் தப்பிச்சென்றுவிட்டனர். இதேபோல மொத்தம் ஐந்து கோயில்களில் தொடர் திருட்டுச் சம்பவம் நடந்தேறியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.