ETV Bharat / state

குமரி முக்கடல் சங்கமத்தைத் தூய்மை செய்த பள்ளி மாணவர்கள்! - Kanniyakumari Mookadal Sangamam Cleanig Work

கன்னியாகுமரி: முக்கடல் சங்கமம் கடற்கரைப் பகுதிகளை சிபிஎஸ்சி பள்ளி மாணவர்கள் தூய்மைப்படுத்தினர்.

முக்கடல் சங்கமத்தை தூய்மை செய்த பள்ளி மாணவர்கள்..! கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் தூய்மை பணி கன்னியாகுமரி கடற்கரை தூய்மை பணி Kanniyakumari Beach Cleaning Work Kanniyakumari Mookadal Sangamam Cleanig Work School students cleaned up Mookadal Sangamam
Kanniyakumari Beach Cleaning Work
author img

By

Published : Feb 20, 2020, 1:29 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், தனியார் சிபிஎஸ்சி பள்ளியின் என்எஸ்எஸ் மாணவர்கள் இன்று காலை முக்கடல் சங்கமம் கடற்கரைப் பகுதிகளை தூய்மைப்படுத்தினர். இந்நிகழ்ச்சியை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

தூய்மையின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள்.

அப்போது அவர் பேசுகையில், "தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நம்வீடுகளில் தேவையில்லாத குப்பைகளை சேகரித்து அவற்றை அழிப்பது போல சுற்றுலா தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை கண்ட இடங்களில் போடாமல் குப்பை தொட்டியில் போடவேண்டும்” என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, முக்கடல் சங்கமம், காந்தி மண்டபம் சாலை, கடற்கரை சாலை ஆகியப் பகுதிகளில் மாணவ மாணவிகள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். பின்னர், கடற்கரையிலிருந்து ரவுண்டானா வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அப்போது மாணவ மாணவிகள் சுத்தம், சுகாதாரம் குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி பேரணியாகச் சென்றனர்.

இதையும் படிங்க:கொரோனா வைரஸ் எதிரொலி - பயணிகள் குறைந்ததால் 'சென்னை டூ ஹாங்காங்' விமான சேவைகள் ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.