ETV Bharat / state

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

கன்னியாகுமரி: நிவர் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவுறுத்தியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த
author img

By

Published : Nov 24, 2020, 2:30 PM IST

நிவர் புயல் எதிரொலியாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அம்மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

"நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு கடற்பகுதிகளில் மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகம் வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, குமரி மாவட்டத்தில் கடலோரப் பகுதியைச் சேர்ந்த அனைத்து நாட்டு படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் உடனே கரை திரும்ப வேண்டும் .மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள் .இதனை தங்களது மீனவ கிராமத்தில் சம்பந்தப்பட்ட மீனவர்கள் அறிந்திடும் வண்ணம் பொது அறிவிப்பு செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டைநோக்கி புயல் வரும் நிலையில் பொதுமக்கள் தங்களது அடையாள ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். .குடிக்க உகந்த நல்ல நீரை போதுமான அளவுக்கு பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசரகால மற்றும் அன்றாடம் தேவைப்படும் மருந்துகளை தயாராக வைத்திருத்தல் அவசியம். காற்றை சமாளித்து எரியும் விளக்குகள் வைத்துக்கொள்ளுங்கள். மேலும் பேட்டரியில் இயங்கும் டார்ச் லைட்டுகள் போதுமான பேட்டரிகள் ,பேரீச்சை ,திராட்சை போன்ற உலர்ந்த பழ வகைகள், வறுத்த வேர்க்கடலை மற்றும் மெழுகுவர்த்தி ,தீப்பெட்டி, மண்ணெண்ணை ஆகியவற்றை போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.

இது மட்டுமல்லாது அடையாள ஆவணங்கள், ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை ,வாக்காளர் அட்டை ,வங்கி கணக்கு புத்தகங்கள், கல்விச் சான்றிதழ் ,சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை நீர் படாத வகையில் பிளாஸ்டிக் உரைகளை கொண்டு பாதுகாப்பாக கட்டி வைக்க வேண்டும். புயல் வருவதற்கு முன்பு வீட்டின் கதவுகள், ஜன்னல் கதவுகளை பழுதுபார்த்து வைத்துக்கொள்ளுங்கள். வீட்டின் அருகில் உள்ள காய்ந்த மரங்கள் விளம்பரப் பலகைகள் ஆகியவற்றை அகற்றி விடுங்கள். புயல் கரையை கடக்கும்போது குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பேட்டரி மூலம் இயங்கும் வானொலி பெட்டி மூலம் அறிவிக்கப்படும் வானிலை நிலவரங்களை கேட்டு தெரிந்து அதன்படி செயல்பட வேண்டும்.

பொதுமக்கள் தங்கள் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் வைப்பதோடு, தீவனங்களை தேவையான அளவு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். அதனை எதிர்கொள்ள மண்டல அளவிலான 9 கண்காணிப்பு குழுக்களும், அனைத்து வருவாய் தாசில்தார்கள் தயார் நிலையில் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை தேவைப்படுமாயின் தற்காலிக முகாம்களுக்கு மாற்றம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது .நெடுஞ்சாலை துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை அலுவலர்கள் ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் மற்றும் பிற சேதம் விளைவிக்கும் பொருள்களை கண்டறிந்து அகற்றவேண்டும்.

ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்றம் செய்திட மின்சாரத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழுதடைந்த நிலையில் உள்ள அரசு கட்டிடங்கள், அங்கன்வாடி கட்டிடங்கள், ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள், மின்கம்பங்கள் பற்றிய விவரங்களை 24 மணி நேரமும் செயல்படும் மாவட்ட அவசர இலவசத் தொலைபேசி எண்களான 1077 மற்றும் 231077 ஆகியவற்றை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்" எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் - விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.