ETV Bharat / state

கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் தேர்தல் பரப்புரை!

author img

By

Published : Apr 1, 2021, 5:32 PM IST

கன்னியாகுமரி: சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் தளவாய் சுந்தரம் உள்நாட்டு மீனவர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

கன்னியாகுமரி
கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரம் தேர்தல் பரப்புரை

கன்னியாகுமரி மாவட்டம், சட்டப்பேரவை அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் இன்று (ஏப்ரல் 1) கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கடுக்கரை, அழகியபாண்டிபுரம், எட்டாமடை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்த தளவாய் சுந்தரம் மக்கள் மத்தியில் பேசுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளங்கள் அனைத்திலும், உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன் பாசி குத்தகை உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உள்நாட்டு மீனவர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும். அதேவேளை மற்றும் நல வாரியத்தில் உள்ளவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது போல், கடற்கரை மற்றும் உள்நாட்டு மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உள்நாட்டு மீனவர்களின் நலன் காக்கவும் அவர்களின் தேவையை உடனடியாக நிறைவேற்றும் விதமாக நாகர்கோவிலில், அவர்களுக்கென தனியாக ஒரு மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என பேசினார்.

இதையும் படிங்க: ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது - அன்புமணி வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.