ETV Bharat / state

குமரியில் கன்னிப்பூ அறுவடை...! விவசாயிகள் கோரிக்கை

கன்னியாகுமரி : கன்னியாகுமரி  மாவட்டத்தில் கன்னிப்பூ நெல் அறுவடை இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ளதால் அரசு கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி
author img

By

Published : Aug 6, 2019, 3:56 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் பறக்கை, தெங்கம்புதூர், பால்குளம், சுசீந்திரம் பகுதிகளில் கன்னிப்பூ, கும்பப்பூ என இருபோக நெல் அறுவடை ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கும். பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் இந்த ஆண்டு திறக்கப்பட்டதால் அறுவடை இம்மாதத்தில் வந்துவிட்டது.

இன்னும் 10 நாட்களில் அறுவடை பணியை மேற்கொள்ள விவசாயிகள் தயாராகிவரும் நிலையில், குமரி மாவட்டத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

குமரியில் கன்னிப்பூ அறுவடை

இந்தக் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாது என்பதால் இதனை அரசு கருத்தில் கொண்டு விரைவில் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பறக்கை, தெங்கம்புதூர், பால்குளம், சுசீந்திரம் பகுதிகளில் கன்னிப்பூ, கும்பப்பூ என இருபோக நெல் அறுவடை ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கும். பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் இந்த ஆண்டு திறக்கப்பட்டதால் அறுவடை இம்மாதத்தில் வந்துவிட்டது.

இன்னும் 10 நாட்களில் அறுவடை பணியை மேற்கொள்ள விவசாயிகள் தயாராகிவரும் நிலையில், குமரி மாவட்டத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

குமரியில் கன்னிப்பூ அறுவடை

இந்தக் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாது என்பதால் இதனை அரசு கருத்தில் கொண்டு விரைவில் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Intro:கன்னியாகுமரி மாவட்டத்தில் பறக்கை, தெங்கம்புதூர், பால்குளம் ,சுசீந்திரம் பகுதியில் கன்னிப்பூ அறுவடை இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. இதனால் விவசாயிகளின் நலன் கருதி அரசு கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Body:கன்னியாகுமரி மாவட்டத்தில் பறக்கை, தெங்கம்புதூர், பால்குளம் ,சுசீந்திரம் பகுதியில் கன்னிப்பூ அறுவடை இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. இதனால் விவசாயிகளின் நலன் கருதி அரசு கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இருபோக சாகுபடி நடைபெற்று வருகிறது. கன்னிப்பூ சாகுபடியை விவசாயிகள் ஜூன் மாதம் தொடங்குவார்கள். கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து ஜூன் 1ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் தற்போது பேச்சிப்பாறை அணையை பலப்படுத்தும் பணி நடப்பதால் இந்த வருடமும் ஜுன் 1-ம் தேதி அணை திறக்கப்படவில்லை. ஜூன் கடைசி வாரத்திலேயே தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் பறக்கை ,தெங்கம்புதூர், பால்குளம், சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அணை திறக்கப்படுவதற்கு முன்பே குளத்து பாசனம் மூலம் விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடி செய்தனர். ஆனால் தோவாளை சானல்,அனந்தனார் சானல் தண்ணீரை நம்பி இருந்து விவசாயிகள் பேச்சிப்பாறை அணையில் திறக்கப்பட்ட பிறகு சாகுபடி பணியை மேற்கொண்டனர் .பறக்கை, தெங்கம்புதூர், பால்குளம் ,சுசீந்திரம் பகுதியில் கன்னிப்பூ பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்கதிர்கள் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இன்னும் 10 நாட்களில் அறுவடை பணியை மேற்கொள்ள விவசாயிகள் தயாராகி வருகின்றனர். அறுவடை பணியை தொடங்க உள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னி பூ சாகுபடி தொடங்குவதற்கு முன்பு பேச்சிப்பாறை அணையில் சுமார் 2 அடி அளவிற்கு தண்ணீர் மட்டுமே இருந்தது. அந்த நிலையில் மழை பெய்ததால் மாவட்டத்தில் பல குளங்கள் நிரம்பியது .குளத்து பாசன வசதியுடன் சாகுபடி செய்யும் சுசீந்திரம், தேரூர், பால்குளம், தெங்கம்புதூர், பறக்கை பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஜூன் மாதத்திற்கு முன்பு சாகுபடியை தொடங்கிவிட்டனர். தற்போது பெருஞ்சாணியிலும் போதிய அளவு தண்ணீர் உள்ளதால் கன்னிப்பூ பருவத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என கருதி முதலில் சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் இன்னும் பத்து அல்லது பதினைந்து நாட்களில் அறுவடை செய்யப்பட உள்ளது .இதனால் குமரி மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் விரைவில் தொடங்க வேண்டும். கடந்த வருடம் குமரி மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் குவிண்டாலுக்கு 1875 ரூபாய் கிடைத்தது .மேலும் வெளிமார்க்கெட்டில் 1,200 ரூபாய் விலை போனது .விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் நிலையம் மூலம் நெல் கொள்முதல் செய்யும்போது விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாது .இதனை கருத்தில் கொண்டு நெல் கொள்முதல் நிலையங்களை விரைவில் அரசு தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி யில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.