கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் சந்திப்பில் உள்ள ரவுண்டானாவின் நடுவே காமராஜர் சிலை ஒன்று உள்ளது. அந்த சிலையின் மூக்கு பகுதியை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும், கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினர் வசந்த குமார் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் விஜயதரணி, ராஜேஷ்குமார், நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். காமராஜர் சிலையை சேதப்படுத்திய சம்பவம் குறித்து வடசேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.