ETV Bharat / state

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்காததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! - இன்றைய குமரி மாவட்ட செய்திகள்

குமரி: மாவட்டத்தில் பல்வேறு விபத்து சம்பவங்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, எந்தவித உதவியும் வழங்கப்படாததைக் கண்டித்து, காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

kamarajar adithanar kazhagam demonstration against not give Public relife fund
author img

By

Published : Nov 19, 2019, 1:40 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் கிருஷ்ணன் கோயிலில் கடந்த இரண்டாம் தேதி நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் லட்சுமி என்ற பெண் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு இதுவரை இழப்பீடுகள் எதுவும் கிடைக்காமல், மோசமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அதேபோல புத்தேரி பகுதியில் தோண்டப்பட்ட குடிநீர் குழாய் கிடங்கை சரியாக மூடாததால், அதில் விழுந்து இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை.

சமீபத்தில், பெய்த கனமழை காரணமாக 300 வீடுகள் இடிந்துள்ளன. மேலும் மூன்று பேர் இறந்துள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த இழப்பீடுகளும் இதுவரை வழங்கப்படவில்லை.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காமராஜர் ஆதித்தனார் கழகத்தினர்

இதனால் இழப்பை சந்தித்த குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தக் குடும்பங்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கக்கோரியும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும் காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க: அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகளை மூடக்கோரி பாமகவினர் மனு!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் பல்வேறு விபத்து சம்பவங்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எந்தவித உதவியும் வழங்கப்படாததை கண்டித்து, காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.Body:குமரி மாவட்டம் கிருஷ்ணன் கோவிலில் குமரிமாவட்டம் கிருஷ்ணன் கோவிலில் கடந்த 2ம் தேதி நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் வெடிவிபத்தில் லட்சுமி என்ற பெண் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். அவருக்கு இதுவரை இழப்பீடுகள் எதுவும் கிடைக்காமல் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 அதேபோல புத்தேரி பகுதியில் தோண்டப்பட்ட குடிநீர் குழாய் கிடங்கை சரிவர மூடாததால் அதில் விழுந்து இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை.

மேலும் குமரி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக 300 வீடுகள் இடிந்துள்ளன. மூன்று பேர் இறந்துள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த இழப்பீடும் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் இழப்பை சந்தித்த குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 இந்த குடும்பங்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கக்கோரியும், நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.