ETV Bharat / state

வேல் ஏந்தும் நிலையில் ஸ்டாலின்: ஜே.பி.நட்டா - கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி: இந்து மக்களின் ஒன்றுமையால் ஸ்டாலின் வேல் ஏந்தி வாக்கு கேட்கும் நிலைக்கு வந்துவிட்டார் என பாஜக அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

வேல் ஏந்தும் நிலைக்கு ஸ்டாலின் தள்ளப்பட்டு உள்ளார்

author img

By

Published : Apr 4, 2021, 9:26 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அருமனையில் பாஜக அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், "கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் பொன். ராதாகிருஷ்ணன் மோடி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். இந்தப் பகுதியில் பிரபலமான ஜெயசீலன், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இருவருக்கும் வாக்களித்து வெற்றிப்பெற செய்யுங்கள். இந்தக் கூட்டத்தை பார்க்கும்போது வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு கிடைத்திருக்கிறது.

இந்த இரண்டு வேட்பாளர்களையும் எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். காங்கிரஸ் கட்சி மனநிலை இழந்துவிட்டது. கேரளத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எதிர் எதிர் அணியில் போட்டியிடுகிறார்கள். ஆனால் அசாம் மற்றும் மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் கைகுலுக்கி கூட்டணி வைத்துள்ளார்கள்.

வேல் ஏந்தும் நிலைக்கு ஸ்டாலின் தள்ளப்பட்டு உள்ளார்

காங்கிரசும், திமுகவும் குடும்ப அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஊழலுக்கு எடுத்துக்காட்டாக இருப்பது காங்கிரஸ், திமுக கட்சிகள். 2ஜி என்பது மாறன் குடும்பம் இரண்டு தலைமுறையாக செய்த ஊழல். 3ஜி என்பது கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் செய்த ஊழல். 4ஜி என்பது நான்கு தலைமுறையாக நாட்டை சுரண்டும் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் செய்த ஊழல்.

காங்கிரஸ், திமுக கட்சிகள் தமிழர் நலனுக்கு எதுவும் செய்யாமல், துரோகம் செய்துவிட்டார்கள். காங்கிரஸ் ஆட்சியில் மாசு கட்டுப்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கொண்டு வந்தார். அப்போது கூட்டணியில் இருந்த திமுக பேசாமல் இருந்தது. அவர்கள் அமைதியாக இருந்ததற்கு 2ஜி ஊழல்தான் காரணம். மோடி ஆட்சிக்கு வந்தபிறகு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கப்பட்டு, அனுமதி அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டுக்காக மோடி நிறைய திட்டங்கள் கொண்டு வந்துள்ளார். தமிழ் ஈழத்தில் தமிழர்களை படுகொலை செய்தது காங்கிரஸ் அரசு. ஆனால், தமிழர்கள் பாதித்த யாழ்ப்பாணம் பகுதியில் நேரில் சென்று தமிழர்களை சந்தித்து, அவர்கள் பரிதாப நிலையை பார்த்து பிரதமர் மோடி வீடுகள் கட்டிக்கொடுத்தார்.

திமுக ஆசி பெற்ற கருப்பர் கூட்டம் தமிழர்களின் கடவுளான முருகனை இழிவுப்படுத்தி பேசினார்கள். அதற்காக பாஜக வேல் யாத்திரை நடத்தியது. இந்து மக்களின் ஒன்றுமையால் ஸ்டாலின் வேல் ஏந்தி வாக்கு கேட்கும் நிலைக்கு வந்துவிட்டார்" என்றார்.

இதையும் படிங்க: மார்க்கெட்டில் காய்கறி விற்பனை செய்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.