ETV Bharat / state

இத்தாலி கப்பல் படை வீரர் துப்பாக்கி சூடு விவகாரம்: தமிழ்நாடு மீனவர்களுக்கு நிவாரணம் கேட்டு மனு - kanniyakumari fishermen recent news

கன்னியாகுமரி: இத்தாலி கப்பல் படை வீரர்களால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட தமிழ்நாடு மீனவர்களுக்கு சர்வதேச சட்டப்படி நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழ்நாடு மீனவர்களுக்கு நிவாரணம் கேட்டு மனு

author img

By

Published : Dec 11, 2020, 6:43 PM IST

கடந்த 2012ஆம் ஆண்டு கேரளாவில் மீன் பிடிக்கச் சென்ற குமரி மீனவர் ஆண்டனி சேவியர் மகன் அஜிஸ் பிங்க், கேரளாவை சேர்ந்த ஜலாஸ்டின் ஆகிய 2 மீனவர்களை, இத்தாலி நாட்டு சரக்கு கப்பலில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

இது தொடர்பான வழக்கில் மனதளவிலும், உடல் அளவிலும், பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இத்தாலி அரசு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என சர்வதேச தீர்ப்பாயம் மே மாதம் 21ஆம் தேதி அன்று உத்தரவு பிறப்பித்தது.

சர்வதேச தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, சர்வதேச சட்ட முறைப்படி மனதளவிலும், உடல் அளவிலும், பொருளாதார அளவிலும் பாதிக்கப்பட்ட விசைப்படகில் இருந்த 9 மீனவர்களுக்கும் தகுந்த இழப்பீட்டை இந்திய அரசு உடனே பெற்றுக்கொடுக்க கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் வழியாக பாரத பிரதமருக்கும், இந்திய நீதித்துறைக்கும் மீனவர்கள் சார்பில் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.

அருட்தந்தை சர்ச்சில் பேசிய காணொலி

தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் தலைவர் அருட்தந்தை சர்ச்சில் தலைமையில் மீனவர்கள், இந்த மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.