ETV Bharat / state

இஸ்ரோ தலைவர் சிவன் படித்த பள்ளியில் தீ விபத்து!

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே  அரசுப் பள்ளியில் எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. உடனே ஆசிரியர்களின் மின்னல் வேக நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

isro chairman school fire
author img

By

Published : Oct 20, 2019, 12:21 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரக்கல்விளைப்பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தான் தற்போதைய இஸ்ரோ தலைவர் டாக்டர். சிவன், தன் தொடக்க கல்வியை பயின்றார்.

இந்தப் பள்ளியில் அமைந்துள்ள சத்துணவுக்கூடத்தில் சமையல் பணி நடைபெற்று கொண்டிருந்தபோது, எரிவாயு கசிந்ததால் எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது. உடனடியாக பள்ளி வகுப்பறைகளில் அமர்ந்திருந்த மாணவ, மாணவிகள் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இஸ்ரோ தலைவர் சிவன் படித்த பள்ளியில் எரிவாயு கசிந்து தீ விபத்து

இந்த விபத்தில் சத்துணவு கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் கம்பி, மின் சாதனப் பொருட்கள் தீக்கிரையாகின. இதற்கிடையே அப்பள்ளி ஆசிரியர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு தீயை அணைத்தனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினரும் விரைந்து சென்று தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையும் படிங்க:

பழுதான அதிநவீன படகுகள் சீரமைப்பு: கண்காணிப்பு பணி தீவிரம்

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இஸ்ரோ தலைவர் டாக்டர். சிவன் பயின்ற அரசு பள்ளியில் எரிவாயு கசிந்து தீவிபத்து. ஆசிரியர்களின் மின்னல் வேக நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்ப்பு.Body:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரக்கல்விளை பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தான் தற்போதைய இஸ்ரோ தலைவர் டாக்டர். சிவன் தன் துவக்க கல்வியை பயின்றார். இப்பள்ளி அவரது வீட்டிற்கு முன்னதாகவே உள்ளது.
இன்று இப்பள்ளியில் அமைந்துள்ள சத்துணவு கூடத்தில் சமையல் பணி நடைபெற்று கொண்டிருந்தபோது, எரிவாயு கசிந்ததால் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பள்ளி கட்டிட வகுப்பறைகளில் அமர்ந்திருந்த மாணவ, மாணவிகள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் சத்துணவு கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் கம்பி மற்றும் மின்சாதன பொருட்கள் தீக்கிரையாயின. இதற்கிடையே அப்பள்ளி ஆசிரியர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு தீயை அணைத்தனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினரும் விரைந்து சென்று தீயை அணைத்து விபத்தை தவிர்த்தனர். எரிவாயு சிலிண்டர் வெடிக்காததால் உயிர் சேதமின்றி தப்பின.
இஸ்ரோ தலைவர் சிவன் பயின்ற பள்ளி என்பதால் இஸ்ரோ சார்பில் புதிய கட்டிடங்கள் உட்பட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருவதோடு சொந்த ஊருக்கு வரும்போதெல்லாம் சிவன் இப்பள்ளிக்கு சென்று மாணவர், ஆசிரியர்களோடு உரையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.