கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் காலமானதையடுத்து தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதிக்குள் நடைபெறும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், உபகரணங்களை தயார்படுத்தும் பணிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள், ஊழியர்கள், பெல் நிறுவன பொறியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு அவற்றில் பழுதானவற்றை கண்டுபிடித்து சரி செய்யும் பணியும் ஏற்கனவே பதிவான வாக்குகளை மாய்க்கும் பணியும் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றன.
அதைத்தொடர்ந்து விவிபேட் இயந்திரத்தில் பொருத்துவதற்கான 3, 700 பேட்டரிகள், இயந்திரத்தில் பொருத்தப்பட வேண்டிய காகிதங்களும் இன்று (அக்.15) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தன.
விரைவில் மின்னணு இயந்திரங்களில் இந்தப் பேட்டரிகள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவரங்களை தயார் நிலையில் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இடைத்தேர்தலுக்கான பணிகள் தீவிரம்!
கன்னியாகுமரி: மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்துவதற்கான பேட்டரிகள், காகிதங்கள் வந்தடைந்தன.